திருவொற்றியூரில் நவீன சுடுகாடு 3 நாளில் சீரமைக்கப்படும் எம்.எல்.ஏ.விடம் அதிகாரி உறுதி
திருவொற்றியூர் பட்டினத்தார் கோவில் அருகே எண்ணூர் கடற்கரை சாலையில் மாநகராட்சிக்கு சொந்தமான நவீன சுடுகாடு உள்ளது. கடந்த 2011–ம் ஆண்டு ரூ.1.25 கோடியில் கட்டப்பட்ட இந்த சுடுகாட்டில் பயோ கியாஸ் மூலம் உடல் தகனம் செய்யப்பட்டு வந்தது.
திருவொற்றியூர்,
இந்த நிலையில் ‘வார்தா’ புயலில் நவீன மின்மயானத்தில் உள்ள ராட்சத புனல்(புகை போக்கி) உடைந்து விழுந்தது. இதனால் தகன மேடையில் வைத்து பிணங்களை எரிக்கப்படும்போது துர்நாற்றம் அருகில் உள்ள குடியிருப்புகளில் வீசியதால் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து நடைபாதையில் வைத்து பிணங்களை எரித்து வந்தனர்.
இதையடுத்து திருவொற்றியூர் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. கே.பி.பி.சாமி மாநகராட்சி அதிகாரிகளுடன் சென்று நவீன சுடுகாட்டை பார்வையிட்டார். பின்னர் மாநகராட்சி தலைமை செயற்பொறியாளரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நவீன மின்மயானத்தை சீரமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.
அதற்கு அவர், இன்னும் 3 நாட்களுக்குள் நவீன சுடுகாடு சீரமைக்கப்படும் என அதிகாரி உறுதி அளித்தார். பணிகளை விரைந்து முடிக்கும்படியும் அவரிடம் எம்.எல்.ஏ. கேட்டு கொண்டார்.