வீட்டின் பூட்டை உடைத்து நகை–பணம் திருட்டு
வீட்டின் பூட்டை உடைத்து நகை–பணம் திருட்டு
அரூர்,
தீர்த்தமலையை அடுத்த நரிப்பள்ளி காட்டுக்கொட்டாயை சேர்ந்தவர் மூர்த்தி(வயது 50). விவசாயி. இவர் நேற்று முன்தினம் மாலை அருகே உள்ள உறவினர் வீட்டிற்கு வீட்டை பூட்டி விட்டு சென்றார். இரவு வீடு திரும்பியபோது வீட்டின் வெளிப்பகுதி கதவில் பூட்டப்பட்டிருந்த பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. வீட்டிற்குள் சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 6 பவுன் நகை மற்றும் ரூ.50 ஆயிரம் பணம் திருடு போயிருந்தது. இதுதொடர்பாக மூர்த்தி கொடுத்த புகாரின் பேரில் கோட்டப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.