ஆடி தள்ளுபடி வியாபாரத்துக்கு மண்டபங்களை வாடகைக்கு விட எதிர்ப்பு: வியாபாரிகள் திடீர் போராட்டம்
குளச்சலில் தனியார் மண்டபங்களை ஆடி தள்ளுபடி வியாபாரத்திற்கு வாடகைக்கு விடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நகர வியாபாரிகள் திடீர் போராட்டம் நடத்தினார்கள்.
குளச்சல்,
குளச்சல் நகர பகுதிகளில் சில தனியார் மண்டபங்களை வியாபாரத்திற்காக வாடகைக்கு விடுகின்றனர்.
இந்த மண்டபங்களில் ஆடி தள்ளுபடி என்ற பெயரில் துணி வியாபாரங்களும் நடைபெறுவதால் நகர பகுதிகளில் கடை நடத்துபவர்களின் வியாபாரம் பாதிக்கப்படுகிறது. இதனால் தனியார் மண்டபங்களை வியாபாரத்திற்கு விடக்கூடாது என்று வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்தநிலையில் நேற்று காலை குளச்சல் நகர வியாபாரிகள் சங்கத்தினர் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் அங்குள்ள ஒரு தனியார் மண்டபம் முன்பு திரண்டு கோஷங்கள் எழுப்பினார்கள். இந்த போராட்டத்துக்கு சங்க தலைவர் பிரபாகர் தலைமை தாங்கினார். செயலாளர் ஜெயசீலன், பொருளாளர் ரமேஷ்குமார், இணை செயலாளர் சஜி, துணைத்தலைவர் காசிம், மாவட்ட வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் நாகராஜன் மற்றும் ஜாண் சுந்தர்ராஜ், சாதிக், கென்னடி, டென்னிஸ் உள்பட திரளான வியாபாரிகள் கலந்துகொண்டனர்.
அதைத்தொடர்ந்து வியாபாரிகள் அங்கிருந்து ஊர்வலமாக குளச்சல் நகரசபை அலுவலகத்திற்கு சென்றனர். அங்கு அதிகாரிகளை சந்தித்து அவர்கள் மனு கொடுத்தனர். அந்த மனுவில் தனியார் மண்டபங்களை வியாபாரத்திற்கு வாடகைக்கு விடுவதற்கு அனுமதி அளிக்ககூடாது என்று கூறியிருந்தனர்.