சுரண்டை அருகே டாஸ்மாக் கடையை அகற்ற கோரி 2–வது நாளாக பொதுமக்கள் போராட்டம்
சுரண்டை அருகே பரங்குன்றாபுரம்– கலிங்கப்பட்டி ரோட்டில் புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையை அகற்ற கோரி நேற்று முன்தினம் பொதுமக்கள் அந்த கடையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். பரங்குன்றாபுரம், கலிங்கப்பட்டி, மருதுபுரம், மரியதாய்புரம், ராமனூர் ஆகிய கிராமங்
சுரண்டை,
சுரண்டை அருகே பரங்குன்றாபுரம்– கலிங்கப்பட்டி ரோட்டில் புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையை அகற்ற கோரி நேற்று முன்தினம் பொதுமக்கள் அந்த கடையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். பரங்குன்றாபுரம், கலிங்கப்பட்டி, மருதுபுரம், மரியதாய்புரம், ராமனூர் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இரவிலும் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டத்தை தொடர்ந்தனர்.
நேற்று 2–வது நாளாக அவர்களது போராட்டம் நீடித்தது. அப்போது அவர்கள் டாஸ்மாக் கடையை அகற்ற கோரி கோஷங்களை எழுப்பினார்கள். இரவிலும் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் நடத்தினர். இப்பகுதியில் இருந்து கடையை அகற்றும்வரை போராட்டம் தொடரும் என்று அவர்கள் தெரிவித்தனர்.