பத்திரகாளியம்மன் கோவிலில் கதவை உடைத்து திருட்டு
தூத்துக்குடி மாதா நகர் பகுதியில் பத்திரகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலை நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் பூஜைகள் முடிந்தபிறகு பூட்டிவிட்டு சென்றார்களாம்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாதா நகர் பகுதியில் பத்திரகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலை நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் பூஜைகள் முடிந்தபிறகு பூட்டிவிட்டு சென்றார்களாம்.
நேற்று காலையில் மீண்டும் கோவிலை திறக்க வந்த போது, கோவிலின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. கோவில் உள்ளே ஒரு தட்டில் வைக்கப்பட்டு இருந்த சுமார் ரூ.2 ஆயிரத்தை மர்ம ஆசாமி திருடி சென்று இருப்பது தெரியவந்தது. அதே நேரத்தில் அம்மன் கழுத்தில் கிடந்த பொட்டுத்தாலி கோவில் கருவறையில் கீழே கிடந்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து கோவில் தர்மகர்த்தா கன்னிமுத்து புகாரின் பேரில், தாளமுத்துநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.