கடலில் குளித்தபோது மாயமான பட்டதாரி வாலிபர்
சென்னை நந்தியம்பாக்கத்தைச் சேர்ந்தவர் கணேசன். இவர் நேற்று தனது மனைவியுடன் வந்து சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்தார்.
சென்னை,
அந்த புகார் மனுவில், கடந்த மாதம் 10-ந்தேதி அன்று பெசன்ட் நகர் கடலுக்கு தனது மகன் ஸ்ரீதர் (வயது20), நண்பர்களுடன் குளிக்கச் சென்றபோது காணாமல் போய்விட்டதாகவும், அவர் கடலில் குளித்தபோது அலைகளால் இழுத்துச்செல்லப்பட்டாரா? அல்லது வேறு ஏதாவது வகையில் காணாமல் போய்விட்டாரா என்பது மர்மமாக உள்ளதாகவும் அவரை கண்டுபிடிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். மகன் ஸ்ரீதருடன் சென்ற நண்பர்கள் மீது சந்தேகம் உள்ளதாகவும், புகார் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. காணாமல் போன ஸ்ரீதர் பட்டப்படிப்பு படித்துள்ளார்.
இந்த புகார் மனு தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க சாஸ்திரி நகர் போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.