மோட்டார் சைக்கிள் விபத்தில் பெண் பலி

சென்னை அய்யப்பன்தாங்கல் பெரிய கொளத்துவாஞ்சேரி பகுதியை சேர்ந்தவர் சேகர் (வயது 32). இவரது மனைவி ராஜேஸ்வரி (29).

Update: 2017-08-08 22:30 GMT
வாலாஜாபாத்,

 இவர்கள் இருவரும் மேல் மதுரமங்கலத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் சென்னைக்கு வந்து கொண்டிருந்தனர்.
மேல்மதுரமங்கலம் பஸ் நிறுத்தம் அருகே வரும்போது அவர்கள் வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக சாலையில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் ராஜேஸ்வரி படுகாயம் அடைந்தார். இதையடுத்து அவர் சிகிச்சைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக போரூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி ராஜேஸ்வரி பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த விபத்து குறித்து சுங்குவார்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

காஞ்சீபுரம் மாவட்டம் மறைமலைநகர் அருகே உள்ள பேரமனூர் பகுதியை சேர்ந்தவர் சிவகுமார் (வயது 40). இவர் நேற்று முன்தினம் மாலை கூடுவாஞ்சேரியில் இருந்து மறைமலைநகர் நோக்கி, தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். காட்டாங்கொளத்தூர் அருகே செல்லும் போது, திடீரென மோட்டார் சைக்கிளில் இருந்து நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் பலத்தகாயம் அடைந்த அவரை, அக்கம் பக்கத்தினர் மீட்டு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக, சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி சிவகுமார் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து மறைமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்