மானூர் அருகே பரிதாபம் மின்சாரம் தாக்கி விவசாயி சாவு

மானூர் அருகே மின்சாரம் தாக்கி விவசாயி பரிதாபமாக இறந்தார்.

Update: 2017-08-08 20:45 GMT

மானூர்,

மானூர் அருகே மின்சாரம் தாக்கி விவசாயி பரிதாபமாக இறந்தார்.

விவசாயி

நெல்லை மாவட்டம் மானூர் அருகே உள்ள மேலப்பிள்ளையார்குளத்தை சேர்ந்தவர் தங்கப்பாண்டியன் (வயது 62), விவசாயி. இவர் நேற்று மதியம் தனது வளர்ப்பு ஆடுகளுக்கு மரத்தில் கிளைகளை வெட்டுவதற்காக ஊருக்கு தென்புறம் ஈஞ்சன்ஓடை அருகே உள்ள தனது தோட்டத்துக்கு சென்றாராம். அங்குள்ள மின்கம்பம் அருகே நின்ற மரத்தில் ஏறி அதில் உள்ள கிளைகளை வெட்டிக் கொண்டிருந்துள்ளார்.

மின்சாரம் தாக்கி சாவு

அப்போது வீசிய காற்றில் மரத்தின் கிளை மின்கம்பத்துக்கு செல்லும் உயரழுத்த மின்ஒயரில் மீது பட்டுள்ளது. இதனால் தங்கப்பாண்டியன் மீது மின்சாரம் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே அவர் இறந்தார். அந்த மின்பாதையானது, காற்றாலையில் இருந்து மின்வாரியத்துக்கு மின்சாரம் கொண்டு செல்லும் 33 கிலோவாட் மின்பாதையாகும்.

இதுகுறித்து மானூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் தங்கபாண்டியனின் உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இறந்து போன தங்கபாண்டியனுக்கு சண்முகத்தாய் என்ற மனைவியும், கண்ணகி என்ற மகளும், சுரேஷ், பட்டமுத்து என்ற 2 மகன்களும் உள்ளனர். அனைவருக்கும் திருமணம் முடிந்து வெளியூர்களில் வசித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்