டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் கலெக்டரிடம் பொதுமக்கள் வலியுறுத்தல்
திருச்செந்தூர் அருகேயுள்ள அடைக்கலாபுரத்தில் புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும், என மாவட்ட கலெக்டரிடம் பொதுமக்கள் வலியுறுத்தினர்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் வெங்கடேஷ் தலைமை தாங்கினார். அவர் பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெற்றார்.
அப்போது திருச்செந்தூர் அருகே உள்ள அடைக்கலாபுரம் ஊர் கமிட்டி சார்பில் பொதுமக்கள் திரண்டு வந்து கலெக்டர் அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து, புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையை அகற்றவேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் மாவட்ட கலெக்டரிடம் கொடுத்த மனுவில் கூறி இருப்பதாவது:-
திருச்செந்தூர் அருகே உள்ள அடைக்கலாபுரம் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு புதிதாக டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் நடத்திய தொடர் போராட்டத்தில் அந்த டாஸ் மாக் கடை மூடப்பட்டது. இந்த நிலையில், கடந்த 2-ந்தேதி அந்த டாஸ்மாக் கடை மீண்டும் திறக்கப்பட்டு மது விற்பனை நடந்து வருகிறது.
குடியிருப்பு பகுதியில் இருக்கும் இந்த மதுக்கடையால் பெண்கள், குழந்தைகள் மற்றும் பள்ளிக்கூட மாணவர்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. பனை தொழில் செய்து வரும் மக்களும் இதனால் பாதிக்கப்படுகிறார்கள். எனவே இந்த கடையை மாவட்ட நிர்வாகம் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறி இருந்தனர்.
இந்து மக்கள் கட்சி மாவட்ட துணை தலைவர் சுடலைமணி தலைமையில் அக்கட்சியினர் கொடுத்த மனுவில், ‘திருச்செந்தூர் தாலுகா தேரிகுடியிருப்பு பகுதியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. அவர்கள் அனைவரும் இந்துக்கள். இந்த பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிக்கூடத்தில் சிலர் ஜெபக்கூடம் தொடங்கி, இந்து மக்களை புண்படுத்தும் வகையில் பேசி வருகிறார்கள். அதிக சத்தத்தில் ஒலிபெருக்கியில் பேசுவதால் இங்குள்ள குழந்தைகள், பெரியவர்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் அந்த பள்ளியில் தொடங்கப்பட்ட ஜெபக்கூடத்தை அகற்ற வேண்டும். மேலும் அந்த பள்ளிக்கூடத்துக்கு வழங்கப்பட்டு வந்த அரசு அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும்’ என்று கூறி இருந்தனர்.
தூத்துக்குடி வீரதமிழர் முன்னணி மாவட்ட செயலாளர் வைகுண்டமாரி கொடுத்த மனுவில், தூத்துக்குடி- நெல்லை தேசிய நெடுஞ்சாலையில் தெய்வச்செயல்புரம் பஸ் நிறுத்தம் அருகே அடிக்கடி சாலை விபத்துகள் ஏற்படுகிறன. அந்த பகுதியில் இரும்பால் ஆன தடுப்பு வேலி அமைக்க வேண்டும் என்று கூறி இருந்தார்.
தூத்துக்குடி மாவட்ட குழு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் கொடுக்கப்பட்ட மனுவில், ஸ்ரீவைகுண்டம் ஒன்றியம் மஞ்சள்நீர் காயல் பகுதியில் சுமார் 2 ஆயிரத்து 500 பேர் உள்ளனர். இங்கு கடந்த 2 மாதங்களாக தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. ஒரு குடம் ரூ.10-க்கு வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது. இந்த பகுதி மக்களுக்கு வாழவல்லான் குடிநீர் திட்டத்தின் படி குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர்.