அழைப்பு உங்களுக்குத்தான்!
டெல்லி கண்டோன்மென்ட் போர்டு அமைப்பில் உதவி ஆசிரியர், சுகாதார ஆய்வாளர் உள்ளிட்ட பணிகளுக்கு 36 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
ஆராய்ச்சி மையம் :
தேசிய தொழில்நுட்ப ஆராய்ச்சி கழகம் சுருக்கமாக என்.டி.ஆர்.ஒ. (NTRO) என்று அழைக்கப்படுகிறது. தற்போது இந்த அமைப்பில் தொழில்நுட்ப உதவியாளர் பணிக்கு 99 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் பணியிடங்கள் உள்ளன. அறிவியல் பட்டப்படிப்பு அல்லது 3 ஆண்டு கால என்ஜினீயரிங் டிப்ளமோ படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். எழுத்துத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 11-8-2017-ந் தேதியாகும். விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை அறிந்து கொள்ளவும் www.ntrorectt.in என்ற இணையதள முகவரியைப் பார்க்கலாம்.
புற்றுநோய் மையம் :
டாடா நினைவு புற்றுநோய் ஆராய்ச்சி- சிகிச்சை மற்றும் கல்வி மையம் மகாராஷ்டிராவில் செயல்படுகிறது. மத்திய மருத்துவ கல்வி மையமான இதில் தற்போது உதவி நிர்வாக அதிகாரி, டெக்னீசியன், ஸ்டெனோகிராபர், நர்ஸ் உள்ளிட்ட அலுவல பணிகளுக்கு 52 பேரை தேர்வு செய்ய அறிவிப்பு வெளியாகி உள்ளது. எம்.பி.ஏ., எம்.சி.ஏ., பி.இ., பி.டெக், நர்சிங், டிப்ளமோ என்ஜினீயரிங் படித்தவர்களுக்கு பணியிடங்கள் உள்ளன. எழுத்துத் தேர்வு, திறமைத் தேர்வு, நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படு கிறார்கள். விருப்பம் உள்ளவர்கள் குறிப்பிட்ட கட்டணம் செலுத்தி இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும். 14-8-2017-ந் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும். பின்னர் நகல் விண்ணப்பத்தை குறிப்பிட்ட முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். www.actrec.gov.in என்ற இணையதளத்தில் முழுமையான விவரங்களை அறிந்து கொண்டு, விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம்.
இந்திய போட்டி ஆணையம் :
மத்திய அரசு அமைப்புகளில் ஒன்றான போட்டி ஆணையம், தனிநபரின் தொழில் உற்பத்தி திறனை ஊக்குவித்தல் மற்றும் தொழில் பெருக்கத்தை அதிகரிக்கும் அமைப்பாக விளங்குகிறது. தற்போது இந்த அமைப்பில் இயக்குனர், துணை இயக்குனர், இணை இயக்குனர், மேலாளர் தரத்திலான அதிகாரி பணியிடங்களுக்கு 31 பேரை தேர்வு செய்ய அறிவிப்பு வெளியாகி உள்ளது. சட்டம், பொருளாதாரம், நிதி, கூட்டுறவு, நூலகம் உள்ளிட்ட பிரிவுகளில் பணியிடங்கள் உள்ளன. பணியிடங்கள் உள்ள பிரிவில் முதுநிலை படிப்புகள், ஆராய்ச்சி படிப்பு படித்தவர்களுக்கு வாய்ப்பு உள்ளது. விருப்பம் உள்ளவர்கள் குறிப்பிட்ட மாதிரியான விண்ணப்பத்தை, தேவையான சான்றுகளுடன் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பம், 18-8-2017-ந் தேதிக்குள் சென்றடையும்படி அனுப்பப்பட வேண்டும். இது பற்றிய விவரங்களை http://www.cci.gov.in/ என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.
கண்டோன்மென்ட் போர்டு :
டெல்லி கண்டோன்மென்ட் போர்டு அமைப்பில் உதவி ஆசிரியர், சுகாதார ஆய்வாளர் உள்ளிட்ட பணிகளுக்கு 36 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். விருப்பம் உள்ளவர்கள் இது பற்றிய விவரங்களை www.cbdelhi.in என்ற இணையதளத்தில் பார்த்துவிட்டு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் 1-9-2017-ந் தேதி செயல்பாட்டிற்கு வரும், 30-9-2017-ந் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும்.