பேக்கரி உரிமையாளரை சுட்டு கொன்றவருக்கு ஆயுள் தண்டனை செசன்ஸ் கோர்ட்டு தீர்ப்பு
பேக்கரி உரிமையாளரை சுட்டு கொன்றவருக்கு ஆயுள் தண்டனை விதித்து செசன்ஸ் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.
மும்பை,
பேக்கரி உரிமையாளரை சுட்டு கொன்றவருக்கு ஆயுள் தண்டனை விதித்து செசன்ஸ் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.
பேக்கரி உரிமையாளர் கொலைமும்பை கோரேகாவ் மேற்கில் உள்ள எஸ்.வி. சாலையில் பேக்கரி நடத்தி வந்தவர் அங்கரா புஜாரி (வயது71). சம்பவத்தன்று இவர் பேக்கரியில் இருந்த போது, அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த முகேஷ் சர்மா (35) என்பவர் திடீரென துப்பாக்கியால் அவரை சரமாரியாக சுட்டார்.
இதில் அங்கரா புஜாரிக்கு தொண்டையில் குண்டு பாய்ந்தது. இதில் அவர் பரிதாபமாக இறந்து போனார். சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து முகேஷ் சர்மாவை கைது செய்தனர். இந்த சம்பவம் கடந்த 2011–ம் ஆண்டு மார்ச் மாதம் நடந்தது.
அங்கரா புஜாரியிடம் தாதா ஹேமந்த் புஜாரி ரூ.50 லட்சம் கேட்டு மிரட்டி வந்து உள்ளார். எனவே முகேஷ் சர்மா அவரது கூட்டாளியாக இருக்கலாம் என போலீசார் கருதினர்.
ஆயுள் தண்டனைஅவர் மீது தின்தோஷி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு விசாரணையின் போது, அவர் பணம் பறிக்கும் முயற்சியில் தாதா ஹேமந்த் புஜாரி சார்பில் அங்கரா புஜாரியை கொலை செய்தார் என்ற குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை.
இருப்பினும் அவர் தான் கொலையாளி என்பது நிரூபிக்கப்பட்டது. இந்த வழக்கில் விசாரணை முடிந்து தீர்ப்பு கூறப்பட்டது. அப்போது குற்றவாளி முகேஷ் சர்மாவுக்கு நீதிபதி ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார்.