லாரி டிரைவர் மீது போலீசார் தாக்குதல் சாலை மறியலில் பக்தர்கள் ஈடுபட முயற்சி
செங்கம் அருகே லாரி டிரைவரை போலீசார் தாக்கியதால் சாலை மறியலில் பக்தர்கள் ஈடுபட முயன்றனர்.
செங்கம்,
செங்கத்தை அடுத்த நீப்பத்துறை அருகே உள்ள டி.அம்மாபேட்டை பகுதியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பக்தர்கள் செங்கம் அடுத்துள்ள புதூர் மாரியம்மன் கோவிலில் பொங்கல் வைத்து விட்டு லாரியில் திரும்பினர்.
அப்போது மேல்புழுதியூர் பழைய அரசு பணிமனை அருகே செங்கம் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அந்த வழியாக பக்தர்கள் வந்த லாரியை போலீசார் மடக்கினர். மேலும் லாரியில் அதிக ஆட்களை ஏற்றி வந்ததை லாரி டிரைவர் பார்த்திபனிடம் (வயது 22) கேட்டதாக தெரிகிறது.
அதைத்தொடர்ந்து வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது போலீசார் லாரி டிரைவர் பார்த்திபன் மற்றும் குமார் என்பவரை தாக்கினர்.
இதை கண்டித்து பக்தர்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். அவர்களிடம் போலீசார் மற்றும் செங்கம் வருவாய் ஆய்வாளர் பாலமுருகன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதையடுத்து பக்தர்கள் கலைந்து சென்றனர்.
இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.