புஞ்சைபுளியம்பட்டியில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல்காந்தி கார் மீது தாக்குதல் நடத்தப்பட்டதை கண்டித்தும், கியாஸ் சிலிண்டர் மானியத்தை ரத்து செய்த மத்திய அரசை கண்டித்தும் ஈரோடு வடக்கு மாவட்ட சிறுபான்மை பிரிவு காங்கிரஸ் கட்சி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
புஞ்சைபுளியம்பட்டி,
குஜராத் மாநிலத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல்காந்தி பார்வையிட்டபோது அவருடைய கார் மீது தாக்குதல் நடத்தப்பட்டதை கண்டித்தும், கியாஸ் சிலிண்டர் மானியத்தை ரத்து செய்த மத்திய அரசை கண்டித்தும் ஈரோடு வடக்கு மாவட்ட சிறுபான்மை பிரிவு காங்கிரஸ் கட்சி சார்பில் புஞ்சைபுளியம்பட்டி பஸ் நிலையம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மாநில செயற்குழு உறுப்பினர் முத்துக்குமார் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இதில் மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் இல்லியாஸ், மாவட்ட துணைத்தலைவர்கள் கனகராஜ், முரளிகிருஷ்ணன், வட்டார தலைவர்கள் முத்துசாமி, தேவராஜ், சத்தி நகர தலைவர் ஸ்ரீராம் உள்பட 200–க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.