கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் திருச்சியில் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டம்
கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் திருச்சியில் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டம் நடத்துவது என்று எரிவாயு சிலிண்டர் வினியோகம் செய்யும் தொழிலாளர்களின் தொழிற்சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
திருச்சி,
வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டர்களை வினியோகம் செய்யும் தொழிலாளர்களின் தொழிற்சங்க கூட்டம் நேற்று திருச்சியில் நடந்தது. மாவட்ட தலைவர் சந்திரமோகன் தலைமை தாங்கினார். மாநில தலைவர் கணேஷ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.
இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
வீட்டுக்கு கொண்டு சென்று எரிவாயு சிலிண்டரை வினியோகம் செய்யும் தொழிலாளிக்கு சிலிண்டருக்கு ரூ.19-ஐ எண்ணெய் நிறுவனங்கள் வழங்க வேண்டும். மத்திய அரசு நிர்ணயம் செய்த மாத சம்பளம் வழங்கப்பட வேண்டும். எரிவாயு சிலிண்டருக்கு எண்ணெய் நிறுவனம் காப்பீடு செய்வது போல் அதனை எடுத்து செல்லும் தொழிலாளியின் உயிரை காக்கவும் காப்பீடு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். சிலிண்டர்களை வினியோகம் செய்வதற்கு அங்கீகாரம் பெற்றுள்ள ஏஜென்சிகளுக்கு எண்ணெய் நிறுவனங்கள் கமிஷன் வழங்குகிறார்கள். ஆனால் தொழிலாளர்களுக்கு உரிய சம்பளம் வழங்காததால் தான் தொழிலாளர்கள் வீடுகளில் டெலிவரி செய்யும்போது அன்பளிப்பு பெற வேண்டியது உள்ளது. இதனை தவிர்க்க சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த கோரிக்கைகளை நிறைவேற்ற மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் திருச்சியில் ஒரு நாள் வீடுகளுக்கு சிலிண்டர் வினியோகம் செய்வதை நிறுத்தி வேலை நிறுத்த போராட்டம் நடத்துவது ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் சங்கத்தின் மாநில செயலாளர் சிக்கந்தர், பொருளாளர் பரமசிவம் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.