பயிர் காப்பீட்டு திட்டத்தில் இணைய விவசாயிகள் முன்வர வேண்டும் மாவட்ட பொறுப்பு செயலாளர் ராஜீவ் சாவ்லா வேண்டுகோள்
பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் இணைய விவசாயிகள் முன்வர வேண்டும் என்று மாவட்ட பொறுப்பு செயலாளர் ராஜீவ் சாவ்லா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சிக்கமகளூரு,
பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் இணைய விவசாயிகள் முன்வர வேண்டும் என்று மாவட்ட பொறுப்பு செயலாளர் ராஜீவ் சாவ்லா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஆலோசனை கூட்டம்சிக்கமகளூரு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அனைத்து துறை அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் சிக்கமகளூரு மாவட்ட பொறுப்பு செயலாளர் ராஜீவ் சாவ்லா, மாவட்ட பஞ்சாயத்து செயல் அதிகாரி ராகப்பிரியா, துணை கலெக்டர் வைசாலி உள்பட பலர் கலந்துகொண்டனர். இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு ராஜீவ் சாவ்லா நிருபர்களிடம் கூறியதாவது:–
இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் வறட்சி, வெள்ள பாதிப்பு ஏற்படும் காலங்களில் விவசாய பயிர்கள் சேதம் அடைகின்றன. இதன்காரணமாக விவசாயிகள் நஷ்டம் அடைகிறார்கள். அவ்வாறு நஷ்டமடையும் விவசாயிகளை காப்பாற்ற மத்திய அரசு ‘பசல் யோஜனா’ திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்தால், அவர்களுக்கு தக்க நஷ்டஈடு வழங்கப்படும். இந்த திட்டத்தில் சில விவசாயிகளே இணைந்துள்ளனர்.
விவசாயிகள் முன்வரவேண்டும்ஆனால், இந்த பயிர் காப்பீட்டு திட்டம் பற்றி விவசாயிகளுக்கு முழுமையாக தெரியவில்லை. எனவே அரசு அதிகாரிகள் பயிர் காப்பீட்டு திட்டம் குறித்து விவசாயிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இந்த திட்டத்தின் கீழ் இணைய விவசாயிகள் முன்வர வேண்டும். மாவட்டத்தில் கடந்த மாதம் மட்டும் 848 விவசாயிகளுக்கு, ரூ.66.73 லட்சம் வறட்சி நிவாரண நிதியாக வழங்கப்பட்டு உள்ளது. மாவட்டத்தில் குடிநீர் தட்டுப்பாடு உள்ள பகுதிகளில் லாரிகள் மூலம் குடிநீர் வினியோகம் செய்ய அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.