புனித பரலோக மாதா ஆலய விண்ணேற்பு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
காமநாயக்கன்பட்டி புனித பரலோக மாதா ஆலய விண்ணேற்பு திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
கோவில்பட்டி,
கோவில்பட்டி அருகே உள்ள காமநாயக்கன்பட்டி புனித பரலோக மாதா ஆலயத்தில் 334–வது விண்ணேற்பு திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தொடர்ந்து திருப்பலி நடந்தது. பின்னர் சமபந்தி விருந்து வழங்கப்பட்டது. இந்த கோடியேற்ற நிகழ்ச்சில் திருச்சி புனித சின்னப்பர் கிறிஸ்துவ கல்லூரி அந்தோணி சாமி, பங்கு தந்தைகள் அருள் அம்புரோஸ், பாக்கிய சாமி, ஜான் செல்வம் அகியோர் கலந்து கொண்டனர்.
விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் திருப்பலி, மறையுரை, நற்கருணை ஆசீர் நடக்கிறது. 7–ம் திருநாளான 12–ந்தேதி (சனிக்கிழமை) மதியம் 12.30 மணிக்கு மரியன்னை மாநாடு நடக்கிறது. 8–ம் திருநாளான 13–ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணிக்கு புதுநன்மை விழா நடக்கிறது.
9–ம் திருநாளான 14–ந்தேதி (திங்கட்கிழமை) இரவு 7 மணிக்கு கோட்டாறு மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை தலைமையில், கூட்டு திருப்பலி, மாலை ஆராதனை நடக்கிறது.
10–ம் திருநாளான 15–ந்தேதி (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 2 மணிக்கு பாளையங்கோட்டை மறைமாவட்ட ஆயர் ஜூடு பால்ராஜ் தலைமையில், தேரடி திருப்பலி நடக்கிறது. தொடர்ந்து தேர் பவனி நடக்கிறது. ஏராளமான பக்தர்கள் தேரின் முன்பு கும்பிடுசேவை செய்து மாதாவை வழிபடுவார்கள்.
பின்னர் காலை 6 மணி, 8 மணி, 10 மணி, மதியம் 12 மணிக்கு திருவிழா திருப்பலிகள் நடக்கிறது. மாலை 6 மணிக்கு திருப்பலி, நற்கருணை பவனி நடக்கிறது. ஏற்பாடுகளை பங்குதந்தை அருள்ராஜ், உதவி பங்குதந்தை அலெக்சாண்டர் தலைமையில் காமநாயக்கன்பட்டி, எட்டுநாயக்கன்பட்டி, குருவிநத்தம், செவல்பட்டி பங்கு மக்கள் செய்து வருகின்றனர்.