ஓய்வுபெற்ற சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

நெல்லை,
தமிழ்நாடு ஓய்வுபெற்ற சத்துணவு ஊழியர் சங்கம் நெல்லை மாவட்டம் சார்பில் பாளையங்கோட்டையில் உள்ள மார்க்கெட் திடலில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட அமைப்பாளர் முருகன் தலைமை தாங்கினார். நவநீத கிருஷ்ணன், முத்தம்மாள், நடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில துணை அமைப்பாளர் சுப்புலட்சுமி வரவேற்று பேசினார். ஓய்வுபெற்ற சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்களை ஊதிய கமிஷனில் சேர்க்க வேண்டும். குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.9 ஆயிரம் வழங்க வேண்டும். குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. அப்போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. மாநில அமைப்பாளர் ஆறுமுகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.