வீட்டில் 28 கிலோ கடல் அட்டைகளை பதுக்கி வைத்திருந்தவர் கைது

ராமேசுவரம் கெந்தமாதன பர்வதத்தில் வீட்டில் 28 கிலோ கடல் அட்டைகளை பதுக்கி வைத்திருந்தவரை வனத்துறையினர் கைது செய்தனர்.

Update: 2017-08-06 22:00 GMT

ராமேசுவரம்,

ராமேசுவரம் கெந்தமாதன பர்வதம் பகுதியில் தடைசெய்யப்பட்ட கடல் அடடைகள் ஒரு வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டு உள்ளதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதை தொடர்ந்து மண்டபம் வனச்சரகர் சதீஷ் தலைமையிலான வனத்துறையினர் நேற்று கெந்தமாதன பர்வதம் பகுதியில் உள்ள முனியசாமி என்பவருடைய வீட்டில் சோதனை செய்தனர்.

அப்போது அந்த வீட்டில் 28 கிலோ கடல் அட்டைகள் பதுக்கி வைத்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதில் 20 கிலோ கடல்அட்டைகள் உயிருடனும் 8 கிலோ கடல் அட்டைகள் பதப் படுத்தப்பட்ட நிலையிலும் இருந்தன.

இதையடுத்து வனத்துறையினர் 28 கிலோ கடல் அட்டைகளையும் பறிமுதல் செய்து அதே பகுதியை சேர்ந்த முனியசாமி (வயது50) என்பவரை கைது செய்தனர். பின்னர் அவரை, மண்டபம் வனச்சரக அலுவலகத்துக்கு கொண்டு சென்று தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் உயிருடன் இருந்த 20 கிலோ கடல் அட்டைகளை வனத்துறையினர் பாம்பன் ரோடு பாலத்தில் நின்ற படி கடலில் விட்டனர்.

மேலும் செய்திகள்