குமரி மாவட்டத்தில் ‘குரூப்–2ஏ’ தேர்வை 12,616 பேர் எழுதினர்
குமரி மாவட்டத்தில் நேற்று நடந்த “குரூப்–2ஏ’’ தேர்வை 12,616 பேர் எழுதினர்.
நாகர்கோவில்,
தமிழகத்தில் காலியாக உள்ள சார்பதிவாளர் பணியிடங்கள் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்காக தமிழ்நாடு அரசு தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) மூலம் ‘குரூப்–2ஏ‘ தேர்வு நேற்று நடந்தது. குமரி மாவட்டத்தில் ‘குரூப்–2ஏ‘ தேர்வு எழுத 16 ஆயிரத்து 899 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதற்காக மாவட்டம் முழுவதும் 37 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தது.
தேர்வு எழுத விண்ணப்பித்து இருந்தவர்களில் 4 ஆயிரத்து 283 பேர் தேர்வு எழுத வரவில்லை. அதைத் தொடர்ந்து 12 ஆயிரத்து 616 பேர் தேர்வு எழுதினார்கள். இவர்களில் 27 பேர் மாற்றுத்திறனாளிகள் ஆவார்கள். காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை தேர்வு நடந்தது.
பறக்கும் படை
தேர்வை கண்காணிக்க 6 பறக்கும் படையும், 9 நடமாடும் குழுக்களும் அமைக்கப்பட்டிருந்தது. இந்த கண்காணிப்பு பணியில் 58 முதன்மை கண்காணிப்பாளர்கள், 845 தேர்வறை கண்காணிப்பாளர்கள் என மொத்தம் 903 அலுவலர்கள் ஈடுபட்டனர்.
நாகர்கோவில் கோட்டாரில் உள்ள கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை அரசு பள்ளியில் நடந்த தேர்வை மாவட்ட கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் நேரில் சென்று ஆய்வு செய்தார். ஆய்வின்போது, அகஸ்தீஸ்வரம் தாசில்தார் அருளரசு உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.
கண்பார்வையற்றவர் ஏமாற்றம்
‘குரூப்–2ஏ‘ தேர்வு எழுத ஆளூரை சேர்ந்த முகமது அஸ்கர் என்பவரும் விண்ணப்பித்து இருந்தார். இவர் கண்பார்வையற்றவர். இதனால் தேர்வுக்கு விண்ணப்பித்த போது அவருக்கு பதிலாக தேர்வு எழுத அரசு சார்பில் ஒரு நபரை நியமிக்க வேண்டும் என்று கூறியிருந்ததாக தெரிகிறது. இவருக்கு கார்மல் பள்ளியில் தேர்வறை ஒதுக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் தேர்வு எழுத வந்த முகமது அஸ்கருக்கு உதவியாளர் நியமிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் உடனே சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்தார். ஆனால் எந்த பலனும் இல்லை. இதனால் ஆத்திரமடைந்த அவர் புகார் அளிப்பதற்காக கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார். ஆனால் நேற்று விடுமுறை என்பதால் கலெக்டர் அலுவலகத்தில் பணியாளர்கள் யாரும் இல்லை. அதைத் தொடர்ந்து அவர் ஏமாற்றத்துடன் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.