காட்டுக்குள்ளே தனிமை.. கலங்குது இளமை..
மாதவிலக்கு சார்ந்த பிரச்சினைக்கு சுயமாகத் தீர்வுகாணப் போய் அது வேறு விதமான விபரீத விளைவை ஏற்படுத்த, திகைத்துப் போயிருக்கிறார்கள், முதுவன் பழங்குடியினப் பெண்கள்.

தமிழக, கேரள எல்லையில், இடுக்கி மாவட்டம், மூணார் மாவட்டத்தில் வசிக்கின்றனர், இந்த முதுவன் இன மக்கள். எடமலைக்குடி இவர்களின் ஊர். காடும், காடு சார்ந்த வாழ்க்கையுமாக இருக்கிறார்கள் இந்த ஆதிவாசி மக்கள்.
இயற்கையோடு ஒன்றிய வாழ்க்கை என்று நாம் கொஞ்சம் பொறாமைப்பட்டாலும், முதுவன் இன பெண்களின் நிலை நம் நெஞ்சை அறுக்கிறது. ஆம், திருமணமான இந்த இனப் பெண்கள் பலர், புத்திர பாக்கியத்துக்காக ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள்.
முதுவன் இனத்தில் ஆண்டாண்டு காலமாகப் பின்பற்றப்பட்டு வரும் ஒரு வழக்கம்தான் இந்தப் பரிதாப நிலைக்குக் காரணம்.
இந்த இனப் பெண்கள் பூப்பெய்தியதும், ஒவ்வொரு மாதமும் மாதவிலக்கு நாட்களில் ஊருக்கு வெளியே காட்டின் ஓரத்தில் உள்ள ஒரு குடிசையில் (இதை வலைமபுரா என்கிறார்கள்) போய் தங்கிவிட வேண்டும். எக்காரணத்தைக் கொண்டும் குடிசையை விட்டு வெளியே வரக் கூடாது. குறிப்பிட்ட பெண்ணுக்குத் தேவையான உணவு, தண்ணீரை ஊரிலிருந்து பெண்களே கொண்டுவந்து கொடுப்பார்கள்.
இந்த வலைமபுரா குடிசையில் தங்கும் பெண்கள் காட்டு விலங்குகளால் தாக்கப்படுவது உண்டு. சில வேளைகளில் ‘நாட்டு’ மிருகங்களும் இந்தக் குடிசைக்குள் புகுந்துவிடுவது உண்டு.
எது எப்படியிருந்தாலும், மாதவிலக்கு நாட்களில் பெண்கள் ‘அசுத்தமானவர்களாகி’ விடுவதாக முதுவன் மக்கள் உறுதியாக நம்புவதால் இந்த வழக்கம் கண்டிப்பாக பின்பற்றப்படுகிறது. அதனால், பெண்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இதைப் பின்பற்றித்தான் ஆக வேண்டும்.
இங்குதான் பிரச்சினை தொடங்குகிறது. ஊருக்கு வெளியே, பாதுகாப்பற்ற, சுகாதாரமற்ற குடிசையில் தங்க விரும்பாத பெண்கள், மாதவிலக்கைத் தடுக்க மாலா டி கருத்தடை மாத்திரையைப் போட்டுக்கொள்ள ஆரம்பித்தனர். அதுதான் வினை. அப்பெண்கள் பின்னர் திருமணப் பந்தத்தில் கருத்தரிக்க விரும்பினாலும் கருத்தரிப்பதில்லை.
உதாரணம், 28 வயதான பெண் மஞ்சு.
“வலைமபுரா குடிசையில் மாதவிலக்கு நாட்களில் தனியாகத் தங்குவது எனக்கு சுத்தமாகப் பிடிக்காது. அதைத் தவிர்க்க என்ன செய்வது என்று யோசித்துக்கொண்டிருப்பேன். அப்போதுதான், எனது கூட்டாளிப் பெண் ஒருத்தி எனக்கு இந்த மாத்திரையைக் கொடுத்தாள். தொடர்ந்து மாதவிலக்கு நெருங்கும்போதெல்லாம் நான் இம்மாத்திரையைச் சாப்பிட்டு வந்தேன். 19 வயதில் எனக்குத் திருமணமானதும் எனது வீட்டுக்காரரிடமும் சொல்லி இந்த மாத்திரையை வாங்கி வரச் செய்து சாப்பிட்டு வந்தேன். ஆனால் நாங்கள் மூன்றாண்டுகளுக்கு முன், குழந்தை பெற்றுக்கொள்ளத் தீர்மானித்ததால் மாத்திரை சாப்பிடுவதை நிறுத்திவிட்டேன். ஆனால் கருத்தரிக்கவே இல்லை. டாக்டர்களிடம் சென்று பார்த்தால், ‘நீ பல ஆண்டுகளாக மாலா டி மாத்திரை சாப்பிட்டதுதான் உன் கருத்தரிப்பில் பிரச்சினையை ஏற்படுத்திவிட்டது என்கிறார்கள்” -மஞ்சுவின் குரலில் வருத்தம் பொங்குகிறது.
இது ஒரு மஞ்சுவின் பிரச்சினை அல்ல. எடமலைக்குடி எங்கும் ஏராளமான பெண்கள் கருவில் குழந்தையைச் சுமக்க முடியாமல் மனதில் கவலையைச் சுமந்தபடி அலைகிறார்கள். கடந்த பத்தாண்டுகளில்தான் இந்தப் பிரச்சினை தீவிரம் அடைந்திருக்கிறது. மாலா டி மாத்திரை பயன்பாடு அதிகரித்த காலகட்டமும் இதுதான்.
ஒரு காலத்தில் முதுவன் இன குடும்பங்களில் குழந்தைச்செல்வங்களுக்குக் குறைவிருக்காது. ஒவ்வொரு வீட்டிலும் குறைந்தது ஏழெட்டு குழந்தைகள் ஓடியாடிக் கொண்டிருக்கும்.
இம்மக்களின் ஜனத்தொகை தாறுமாறாக ஏறிக்கொண்டிருப்பதை அறிந்த கேரள அரசு, தொண்ணூறுகளில் மாலா டி மாத்திரையை இவர்களுக்கு அறிமுகப்படுத்தியது.
இது மாதவிலக்கைத் தடுப்பதை பயன்படுத்தி உணர்ந்த குடும்பப் பெண்கள், வயதுக்கு வந்த தங்கள் மகள்களுக்கும் இந்த மாத்திரையைக் கொடுக்க ஆரம்பித்தார்கள். வெகு விரைவிலேயே இம்மாத்திரை வெகுவாக பிரபலமாகிவிட்டது.
இதற்கான ‘டிமாண்ட்’ அதிகரிக்க, ரோட்டோர டீக்கடையிலேயே இதை தாராளமாக விற்க ஆரம்பித்தார்கள். இப்படி மாலா டி விற்பனை மலைப்பூட்டும் வகையில் எகிறியபோதுதான் கேரள அரசு விழித்துக்கொண்டு மூணார் பகுதியில் இம்மாத் திரைக்குத் தடை விதித்தது.
மாலா டி மாத்திரை ஏற்படுத்திய தாக்கம், முதுவன் இனமே படிப்படியாக அழிந்துபோகுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது. 2013-ல் 2236 ஆக இருந்த இம்மக்களின் எண்ணிக்கை, தற்போது 1836 ஆக குறைந்திருக்கிறது. அரசு புள்ளிவிவரத்தின்படியே, எடமலைக்குடியில் உள்ள 325 திருமணத் தம்பதியரில் சுமார் 100 ஜோடிகள் குழந்தைகள் இல்லாமல் இருக்கின்றன.
அரசின் முயற்சியால் இப்போது முதுவன் இனப் பெண்களிடம் விழிப்புணர்வு பரவ ஆரம்பித்திருப்பது ஓர் ஆறுதல்.
தேவிகுளம் அரசு சுகாதார மைய மருத்துவ அலுவலர் அர்ச்சனா போன்றோர், இந்த விஷயத்தில் தீவிர முயற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார்கள்.
அட்டைகள், காட்டு விலங்குகளின் அச்சுறுத்தலுக்கு இடையே, அர்ச்சனா ஒவ்வொரு மாதமும் இந்த மலைக் கிராமப் பகுதிகளுக்கு விஜயம் செய்கிறார். மாலா டியை யார் யார், எதற்கு மட்டும் பயன்படுத்த வேண்டும் என்று எடுத்துக்கூறுகிறார். நான்கு செவிலியர்களும் இப்பகுதியில் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
தங்களின் முயற்சியால் தற்போது நிலைமை மாறிவருவதாக இவர்கள் கூறினாலும், இன்னும் சில பெண்கள் மாதவிலக்கைத் தடுக்க ரகசியமாக மாத்திரை பயன்படுத்துவது தொடர்வதாகத் தெரிகிறது.
கேரளப் பகுதியில் இம்மாத்திரைக்கு தடை விதிக்கப்பட்டாலும், தமிழ்நாட்டுப் பகுதியில் இருந்து கூடுதல் விலை கொடுத்தும் வாங்கி வந்துகொண்டிருக்கிறார்களாம்.
ஊருக்கு ஒதுக்குப்புறமாக பெண்களை ‘அந்த’ நாட்களில் தங்க வைக்கும் வரை இந்தப் பிரச்சினைக்கு முடிவில்லை என்றுதான் தோன்றுகிறது.
ஆனால் மெல்ல மெல்ல வந்தாலும், மாற்றம் ஒருநாள் வந்தே தீரும் என்பது விஜயலட்சுமி போன்ற பெண்களின் நம்பிக்கை.
இங்குள்ள அங்கன்வாடி பள்ளியில் 20 ஆண்டுகளாகப் பணிபுரியும் ஆசிரியை இவர். “நான் எடமலைக்குடி வந்த புதிதில் இங்கு பெண்கள் செருப்பு அணிந்து நடக்கவோ, குடை பிடிக்கவோ கூட அனுமதியில்லை. ஆனால் இன்று அதையெல்லாம் இக்கிராமப் பெண்கள் செய்வதைப் பார்க்கிறேன். எனவே மாற்றம் வரும். ஆனால் கொஞ்சம் மெதுவாக வரும்” என்கிறார்.
மலைப்பகுதி என்பதால் மாற்றம் மெதுவாக வராமல் விரைவாக வந்தால் நல்லது.