‘குறைபாடு’ குறையட்டும்
அடுத்தவர்களை பற்றி குறை சொல்வதையே சிலர் வழக்கமாக கொண்டிருப்பார்கள். அவர்கள் செய்யும் ஒவ்வொரு செயலிலும் குறைகளை சுட்டிக்காட்டுவார்கள்.
அடுத்தவர்களை பற்றி குறை சொல்வதையே சிலர் வழக்கமாக கொண்டிருப்பார்கள். அவர்கள் செய்யும் ஒவ்வொரு செயலிலும் குறைகளை சுட்டிக் காட்டுவார்கள். ‘அப்படி செய்தது தவறு, இப்படி நடந்து கொண்ட விதம் சரியில்லை’ என்று விமர்சிப்பார்கள். தங்களுக்கு பிடித்தமாதிரி நடந்து கொள்ள வேண்டும் என்பதே குறை சொல்பவர்களின் முக்கிய எதிர்பார்ப்பாக இருக்கும். அவர்களுடைய மனநிலைக்கு சரியாக தோன்றும் விஷயத்தை அடுத்தவர்கள் செய்துவிட்டால் போதும். மனதார பாராட்டுவார்கள். அப்போது குறைகளே அவர்கள் கண்களுக்கு புலப்படாது. இத்தகைய மனப்பாங்கினை தவிர்க்க வேண்டும்.
மற்றவர்களை பற்றி குறை சொல்வதையே வழக்கமாக்கி கொண்டால் அவர்களின் வெறுப்புக்கு ஆளாக நேரிடும். ‘எதற்கெடுத்தாலும் குறை சொல்வதுதான் இவரின் இயல்பு’ என்ற மனநிலைக்கு அவர்கள் மாறி விடுவார்கள். எதற்கெடுத்தாலும் குறை காண்பது மற்றவர்கள் மத்தியில் எதிர்மறையான எண்ணங்களையே உருவாக்கிவிடும்.
மற்றவர்களின் செயல்பாடுகளில் குறை இருப்பது தெரிய வந்தாலும் கூடுமானவரை அதை பற்றி விமர்சிப்பதை தவிர்க்க வேண்டும். குறிப்பாக பலர் முன்னிலையில் ஒருபோதும் விமர்சனம் செய்யக்கூடாது.
அது குறை சொல்பவரை பற்றிய தவறான எண்ணங்களை மற்றவர்கள் மத்தியில் உருவாகவும் வழிவகுத்துவிடும். அவர்கள் மற்றவர்களின் செயல்பாடுகளில் தென்படும் நிறைகளை பட்டியலிட்டு பார்க்க வேண்டும். அப்போது நிச்சயம் அவர்கள் உங்களை விரும்புவார்கள். பாராட்டு மழையில் நனையும்போது தம்மை புகழ்ந்து பேசுபவர்களிடம் அன்பு காட்டுவார்கள். குறைகளை சொல்லும்போது விலகிவிடுவார்கள். ஒருவரை குறை காண்பதற்கு முன்பாக, அவருடைய செயல்பாடுகள் எப்படி இருக்கிறது? எதை குறையாக மதிப்பிடுகிறீர்கள்? என்பதை நிதானமாக யோசித்தால், குறை சொல்கிறவரிடமே இதுபோன்ற குறைபாடுகள் இருப்பதை உணரலாம்.