நாசிக் அருகே பயங்கரம் தாய்– மகன் கழுத்து அறுத்து கொலை கொலையாளிக்கு வலைவீச்சு
நாசிக் அருகே தாயும், மகனும் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கொலையாளியை போலீசார் தேடிவருகிறார்கள். விதவை பெண் நாசிக் மாவட்டம் திண்டோரி தாலுகா கிருஷ்ணா நகரில் உள்ள ஷெல்கே வாடி பகுதியை சேர்ந்த பெண் சவிதா (வயது 35).
நாசிக்,
நாசிக் அருகே தாயும், மகனும் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கொலையாளியை போலீசார் தேடிவருகிறார்கள்.
விதவை பெண்நாசிக் மாவட்டம் திண்டோரி தாலுகா கிருஷ்ணா நகரில் உள்ள ஷெல்கே வாடி பகுதியை சேர்ந்த பெண் சவிதா (வயது 35). இவரது கணவர் கோதிராம் 4 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இதனால், சவிதா தன்னுடைய மகன் கரண் (15) உடன் தனியாக வசித்து வந்தார்.
இந்த நிலையில், நேற்று அதிகாலை 1.30 மணியளவில் வீட்டில் தாயும், மகனும் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது, உள்ளே புகுந்த மர்மநபர், திடீரென இருவரது கழுத்தையும் கூர்மையான ஆயுதத்தால் அறுத்தார்.
சாவுஇதனால், ரத்தம் பீறிட்டு வெளியேறி தாயும், மகனும் படுக்கையிலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிர் இழந்தனர். இதைத்தொடர்ந்து, கொலையாளி அங்கிருந்து தப்பியோடிவிட்டார். இந்த நிலையில், சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர், ஓடிவந்து பார்த்தனர்.
அப்போது, சவிதாவும், அவரது மகனும் படுக்கையில் பிணமாக கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள், உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து இருவரது உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பரபரப்புஇந்த இரட்டைக்கொலை குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளியை வலைவீசி தேடிவருகிறார்கள். மகனுடன் விதவை பெண் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.