பழனியில் கழுத்தை நெரித்து தொழிலாளி கொலை நகை, பணத்துக்காக நடந்ததா?
பழனியில் கழுத்தை நெரித்து தொழிலாளி கொலை செய்யப்பட்டார். நகை, பணத்துக்காக அவர் கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பழனி,
பழனி பை-பாஸ் ரோடு சிறுவர் பூங்கா அருகே தனியாருக்கு சொந்தமான இடம் உள்ளது. அதில் கருவேல மரங்கள் வளர்ந்துள்ளன. இங்கு நேற்று 40 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் கிடந்தது. இதுகுறித்து பழனி டவுன் கிராம நிர்வாக அலுவலர் கார்த்திக் பழனி அடிவாரம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் பழனி போலீஸ் துணை சூப்பிரண்டு (பொறுப்பு) ஆறுமுகம், இன்ஸ்பெக்டர் வைரம், அடிவாரம் சப்-இன்ஸ்பெக்டர் லதா, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர்.
அப்போது 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் முகம் சிதைந்து நிர்வாண நிலையில் பிணமாக கிடந்தார். அருகே இளஞ்சிவப்பு நிறத்தில் முழுக்கை சட்டையும், காவிநிற வேட்டியும், செருப்பும் கிடந்தது. மேலும் பூப்போட்ட நீலநிறத்தில் சுடிதார், துப்பட்டா ஆகியவையும் அந்த பகுதியில் கிடந்துள்ளது.
இதையொட்டி பிணத்தை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பழனி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது தெரியவில்லை. இவர் எதற்காக கொலை செய்யப்பட்டார் என்றும் தெரியவில்லை. இதுகுறித்து துப்பு துலக்குவதற்காக 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.
போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் இறந்து கிடந்தது பழனி ஆயக்குடியை சேர்ந்த நாட்டுத்துரை (வயது 40) என்பது தெரிய வந்தது. இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு பழனி பஸ் நிலையம் அருகே உள்ள ஒரு தனியார் தங்கும் விடுதியில் வேலை பார்த்து வந்ததுள்ளார். நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு வேலை முடிந்து வீட்டுக்கு சென்றவர் நேற்று வேலைக்கு திரும்பி வரவில்லை. இந்த நிலையில் அவர் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது. மேலும் அடையாளம் தெரியாமல் இருப்பதற்காக அவருடைய முகத்தை கல்லால் சிதைத்து உள்ளனர்.
இவருக்கு மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். இவர் குடும்பத்தகராறு காரணமாக கொலை செய்யப்பட்டாரா? அல்லது நகை பணத்துக்காக கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.