கண்ணமங்கலம் அருகே 3 கடைகளில் தீ விபத்து
கண்ணமங்கலம் அருகே 3 கடைகளில் தீ விபத்து ஏற்பட்டது.
கண்ணமங்கலம்,
கண்ணமங்கலம் அருகே கொங்கராம்பட்டு கேட்டில் ஆற்காடு ரோடு பகுதியில் கீழ்பள்ளிப்பட்டு சேகர் (வயது 65) என்பவருக்கு சொந்தமான டீக்கடை உள்ளது. அதன் அருகில் கொங்கராம்பட்டு பகுதியை சேர்ந்த பஞ்சாட்சரம் (53) என்பவருக்கு சொந்தமாக ஸ்வீட் கடையும், களம்பூரான்கோட்டை பகுதியை சேர்ந்த ரகு (60) என்பவருக்கு சொந்தமான பூ, பழக்கடைகள் உள்ளது.
இதில் ஸ்வீட் கடை இரும்பு பெட்டியாலும், மற்ற 2 கடைகளுக்கு கீற்றுக் கொட்டகையாலும் அமைக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு இந்த கடைகளில் தீ விபத்து ஏற்பட்டது. இதை கண்ட அக்கம்பக்கத்தினர் வேலூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். மேலும் அவர்கள் தண்ணீர் ஊற்றி தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
இதற்கிடையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர். இருப்பினும் இந்த 3 கடைகளும் தீயில் கருகி நாசமானது. இந்த தீ விபத்தினால் சுமார் ரூ.30 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் தீயில் கருகியது.
இதுகுறித்து தகவல் அறிந்த கண்ணமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் இந்த விபத்து மின்கசிவால் ஏற்பட்டதா? அல்லது வேறு யாரேனும் தீ வைத்தார்களா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.