உரிமம் இல்லாமல் விதைகள் விற்றால் 7 ஆண்டு ஜெயில் அதிகாரி எச்சரிக்கை
உரிமம் பெறாமல் விதைகள் விற்பனை செய்தால் 7 ஆண்டு ஜெயில் தண்டனை அனுபவிக்க நேரிடும் என அதிகாரி எச்சரித்துள்ளார்.
விருதுநகர்,
விருதுநகர் விதை ஆய்வு துணை இயக்குனர் கிருஷ்ணகுமாரி வெளியிட்டுள்ள அறிக்கை யில் தெரிவித்துள்ளதாவது:-
விவசாயிகளுக்கு விற்பனை செய்யப்படும் விதைப் பைகளில் விவர அட்டை அல்லது விதைச் சான்று துறையினரால் வழங்கப்பட்டிருக்கும் சான்று அட்டை இணைக்கப்பட்டிருக்க வேண்டும். எவ்வித விவரமும் இல்லாது விற்பனை செய்யப்படும் விதைப் பைகளை விவசாயிகள் வாங்கக் கூடாது.
விவர அட்டை அல்லது சான்று அட்டைகளில் குறிப்பிடப்பட்டிருக்கும் விதை பரிசோதனை நாள், காலக்கெடு தேதி ஆகியவற்றை கவனித்து வாங்க வேண்டும். காலக்கெடு முடிந்த விதையை கடைகளில் இருப்பு வைக்கக் கூடாது. அட்டையில் கொடுக்கப்பட்டிருக்கும் விவரங்களில் முக்கியமாக பயிரின் ரகம், விதைப்பரிசோதனை நாள், காலக்கெடு தேதி ஆகியவை திருத்தம் செய்யப்பட்டிருந்தாலோ அல்லது மாற்றம் செய்யப்பட்டிருந்தாலோ அந்த விதைகளை வாங்கக் கூடாது.
விதைப் பைகள் மீது சான்று துறையினரின் சின்னம் காணப்பட்டாலும் சான்று அட்டை இல்லாமல் இருந்தால் அந்த பைகளை வாங்கக் கூடாது. சான்றளிப்பு துறையினரின் சின்னம் பதித்த பைகளில் விவர அட்டையை இணைத்து விற்பனை செய்வது சட்ட விதிகளுக்கு புறம்பானது.
விதைப்பைகளில் இணைக்கப்பட்டிருப்பது சான்று அட்டை தானா என்பதை விவசாயிகளும் கவனித்து வாங்க வேண்டும். வியாபாரிகள் விதை விற்பனை உரிமம் பெற்ற இடத்தில் முறையாக விதைகளை வாங்கி விற்பனை செய்ய வேண்டும்.
விதை விற்பனை உரிமம் பெறாமல் விற்பனை செய்தால் 7 ஆண்டு ஜெயில் தண்டனை அனுபவிக்க நேரிடும். கிராமங்களில் அறிமுகமில்லாதவர்கள் விதை விற்பனை செய்தால் அதனை விவசாயிகள் வாங்கக் கூடாது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.