வடமாநில தொழிலாளிக்கு கத்திக்குத்து தனியார் நிறுவன ஊழியர் கைது

பாகலூர் அருகே வடமாநில தொழிலாளிக்கு கத்திக்குத்து தனியார் நிறுவன ஊழியர் கைது

Update: 2017-08-05 22:15 GMT
ஓசூர்,

மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்தவர் சந்தீப் (வயது 22). இவர் பாகலூர் அருகே தின்னேப்பள்ளியில் தங்கி தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். அதே நிறுவனத்தில் பாகலூர் ராஜீவ்காந்தி நகரைச் சேர்ந்த சுபீர் (19) என்பவர் வேலை செய்து வந்தார். இவர்கள் 2 பேருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. சம்பவத்தன்று தின்னப்பள்ளி பகுதியில் சந்தீப் நடந்து சென்றபோது வழிமறித்து சுபீர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரமடைந்த சுபீர் கத்தியால் சந்தீப்பை குத்தினார். இதில் காயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக ஓசூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இது தொடர்பாக சந்தீப் கொடுத்த புகாரின் பேரில் பாகலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முனிகிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து சுபீரை கைது செய்தார். 

மேலும் செய்திகள்