ரோடுகளில் சுற்றித்திரிந்த 31 சிறுவர்கள் மீட்பு
ராமநாதபுரம் மாவட்டத்தில் புன்னகையை தேடி திட்டத்தின்கீழ் கடந்த மாதம் முழுவதும் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் 31 சிறுவர்கள் மீட்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கபட்டுள்ளனர்.
கீழக்கரை,
ராமநாதபுரம் மாவட்டத்தில் ரோடுகளில் சுற்றித்திரியும் சிறுவர்களை மீட்கும் ஆபரேசன் முஸ்கான் எனப்படும் புன்னகையை தேடி என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டுஉள்ளது. இந்த திட்டத்தின்கீழ் கடந்த மாதம் முழுவதும் இதற்கென அமைக்கப்பட்டுள்ள 6 குழுக்களின் மூலம் மாவட்டம் முழுவதும் 206 இடங்களில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி ரோடுகளில் சுற்றித்திரியும் சிறுவர்களை அடையாளம் கண்டு அவர்களை மீட்டு பெற்றோர்களிடம் ஒப்படைத்தல், யார் என்ற விவரம் தெரியாதவர்களை அரசு காப்பகத்தில் சேர்த்து பராமரித்து கல்வி அளித்தல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. மாவட்ட காவல்துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, சமூக நலத்துறை, சைல்டுலைன் ஆகியோரின் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த புன்னகையை தேடி திட்டம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ்மீனா மேற்பார்வையில் நடைபெற்றது.
இந்த புன்னகையை தேடி குழுவினர் மாவட்டத்தில் மேற்கொண்ட தீவிர தேடுதல் வேட்டையில் பல சிறுவர்கள் சுற்றித்திரிந்ததை கண்டுபிடித்துள்ளனர். இவ்வாறு ரோடுகளில் சுற்றித்திரிந்த 31 சிறுவர்கள் மீட்கப்பட்டு குழந்தைகள் நலக்குழு முன்பு ஆஜர்செய்யப்பட்டு பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளனர்.
இவர்களில் 2 சிறுவர்கள் வெளிமாநிலங்களை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே, காணவில்லை என்று வழக்குபதிவு செய்யப்பட்ட நிகழ்வுகளில் 6 பேர் மீட்கப்பட்டு உள்ளனர். ரோடுகளில் சுற்றித்திரியும் சிறுவர்கள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.