கடலூர் மாவட்டத்தில் மேலும் 61 குளங்களில் வண்டல் மண் எடுக்க அனுமதி
கடலூர் மாவட்டத்தில் மேலும் 61 குளங்களில் வண்டல் மண் எடுக்க அனுமதி அளித்து கலெக்டர் ராஜேஷ் உத்தரவிட்டு உள்ளார். இது தொடர்பாக கடலூர் மாவட்ட கலெக்டர் ராஜேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கடலூர்,
கடுமையான வறட்சி காரணமாக ஏரி மற்றும் குளங்கள் நீரின்றி வறண்டுள்ள சூழ்நிலையை பயன்படுத்தி விளைநிலங்களின் மண் வளத்தை மேம்படுத்தவும், நீர்நிலைகளின் கொள்ளளவை அதிகப்படுத்தவும் ஏரி, குளங்களில் வண்டல் மண் அள்ளிக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
இதன் அடிப்படையில் நீர் நிலைகளில் படிந்துள்ள களிமண் மற்றும் வண்டல் மண் ஆகியவற்றை விவசாயம் மற்றும் பொதுப்பயன்பாடு மற்றும் மண்பாண்ட தொழிலுக்கு பயன்படுத்தும் நோக்கில் கடலூர் மாவட்டத்தில் 700 ஏரி, குளங்களில் உத்தேசமாக 18½ லட்சம் கன மீட்டர் அளவுக்கு வண்டல் மண்ணை அகற்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இதில் இதுவரை 11 லட்சத்து 45 ஆயிரம் கனமீட்டர் வண்டல் மண்ணை 11 ஆயிரத்து 500 விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் எடுத்து பயன் அடைந்து உள்ளனர்.
மேலும் விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கைகளை ஏற்று கூடுதலாக ஊரக வளர்ச்சித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 61 குளங்களில் வண்டல் மண் எடுக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. ஆக மொத்தம் 761 நீர்நிலைகளில் இலவசமாக வண்டல் மண் மற்றும் களி மண் எடுக்க அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. இந்த நீர்நிலைகளில் வண்டல் மண் எடுக்க விரும்பும் விவசாயிகள் விண்ணப்ப படிவத்தினை பெற்று முழுமையாக பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட ஏரி அமைந்துள்ள கிராமத்தின் கிராம நிர்வாக அதிகாரியிடம் சான்று பெற்று வட்டாரவ ளர்ச்சி அலுவலகத்தில் அளித்து உரிய அனுமதி பெற்று வண்டல் மண், களிமண் எடுத்துக்கொள்ளலாம். மேலும் இது குறித்த தகவல்களை பெற 04142-221082 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். எதிர்வரும் வடகிழக்கு பருவமழைக ாலத்துக்குள் வண்டல் மண்ணை சேகரித்து பயன்பெறுமாறு விவசாயிகள், பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு கலெக்டர் ராஜேஷ் கூறி உள்ளார்.