சிவகாசி பட்டாசு ஆலைகளில் தடை செய்யப்பட்ட வேதிப்பொருட்களா?
பட்டாசு தொழிலுக்கு அவ்வப்போது ஏதாவது பிரச்சினை வருவது வழக்கம். இப்போது சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு அடிப்படையில் புது பிரச்சினை கிளம்பி இருக்கிறது.
கடந்த தீபாவளியின் போது டெல்லி மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் அதிக அளவில் புகை மண்டலம் ஏற்பட்டு சுற்றுச்சூழல் மாசு ஏற்பட்டது. இதற்கு பட்டாசு வெடித்தது தான் காரணம் என்று கூறப்பட்டது.
இதைத் தொடர்ந்து சமூக ஆர்வலர்கள் சிலர் பட்டாசால் காற்று மாசு ஏற்படுகிறது என்று கூறி பட்டாசுக்கு தடை கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இதைத் தொடர்ந்து, உச்சநீதிமன்றம், பட்டாசு தயாரிப்பில் பயன்படுத்தப்படும் தீங்கு விளைவிக்கக்கூடிய உலோகங்களான காரீயம், பாதரசம், கல்லியம், ஆர்சனிக், ஆன்டிமோனி ஆகியவற்றால் மிகப்பெரிய அளவில் காற்று மாசு ஏற்படுகிறது. ஆகவே பட்டாசு தயாரிப்பில் மேற்கண்ட 5 உலோகங்களையும் பயன்படுத்த தடை விதிக்கப்படுகிறது என உத்தரவிட்டது.
இது குறித்து சிவகாசி பகுதியில் உள்ள பட்டாசு உற்பத்தியாளர்கள் சிலரிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது:-
ஆசைத்தம்பி (தலைவர், தமிழ்நாடு பட்டாசு மற்றும் கேப்வெடி உற்பத்தியாளர்கள் சங்கம், சிவகாசி):-
உச்சநீதிமன்றத்தின் உத்தரவு வரவேற்கத்தக்கது. சுற்றுச்சூழல் மாசு அடையாமல் பாதுகாக்க நம் அனைவருக்கும் கடமை உள்ளது. ஆனால் சிவகாசி பகுதி பட்டாசு ஆலைகளில் இந்த வகை வேதிப்பொருட்களை பயன்படுத்தி பட்டாசுகள் தயாரிப்பது இல்லை. அதற்கான அவசியம் இதுவரை ஏற்படவில்லை. அரசு அனுமதித்துள்ள வேதிப்பொருட்களைக் கொண்டு மட்டுமே பட்டாசுகளை தயாரித்து அனுப்பிவைக்கிறோம்.
ஏ.பி.செல்வராஜன் (துணைத்தலைவர் தமிழ்நாடு பட்டாசு மற்றும் கேப்வெடி உற்பத்தியாளர்கள் சங்கம், சிவகாசி):-
பட்டாசு என்பது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் மகிழ்விக்கக் கூடியது. அதுபோன்ற ஒரு பொருளில் ஆபத்தை கலப்பது ஏற்புடையது அல்ல. எனவே சிவகாசி பட்டாசு தயாரிப்பாளர்கள் காரீயம், பாதரசம், கல்லியம், ஆர்சனிக், ஆன்டிமோனி போன்ற வேதிப்பொருட்களை சேர்ப்பது இல்லை. அது மட்டும் அல்ல பட்டாசு வெடிப்பதால் சுற்றுச்சூழல் பாதிக்கிறது என்ற கருத்து உண்மை என்றால் அமெரிக்காவில் ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினவிழாவில் பல கோடி மதிப்புள்ள பட்டாசுகள் கொளுத்தப்பட்டு அங்குள்ள மக்களை அந்த நாட்டு அரசு மகிழ்விக்கிறது. அதே போல் பல நாடுகளில் கோவில் திருவிழா, விளையாட்டு விழா என அனைத்துக்கும் தற்போது பட்டாசுகளை அதிக அளவில் பயன்படுத்தி வருகிறார்கள். அதனால் சுற்றுச்சுழல் பாதிப்பது இல்லை.
அரசன் ஜி.வி.கார்த்திக் (பட்டாசு ஆலை உரிமையாளர்):-
3 தலைமுறைகளாக பட்டாசு உற்பத்தி தொழிலில் நாங்கள் ஈடுபட்டு வருகிறோம். உச்ச நீதிமன்றம் பட்டாசு உற்பத்திக்கு பயன்படுத்தக்கூடாது என்று அறிவிக்கப்பட்டுள்ள சில வேதிப்பொருட்கள் குறித்து நான் கேள்விப்பட்டது கூட கிடையாது. சிவகாசியில் தயாரிக்கப்படும் பட்டாசுகள் எப்போதும் தரமானவையாகவே இருக்கும்.
சிவகாசி பட்டாசு தொழிலுக்கு அவ்வப்போது ஏதாவது ஒரு பிரச்சினை வந்தாலும் அந்த பிரச்சினையை போக்க பட்டாசு உற்பத்தியாளர்கள் கடுமையாக போராடி வருகிறார்கள். தற்போது கூட பட்டாசுக்கு 28 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்பட்டுள்ளது. இந்த வரியை குறைக்க சம்பந்தப்பட்ட மத்திய அமைச்சரையும், மாநில அமைச்சர்களையும், அதிகாரிகளையும் பட்டாசு உற்பத்தியாளர்கள் சந்தித்து 8 லட்சம் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் வரி உயர்வு இருக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.
இந்த கோரிக்கை நிறைவேறும் என்ற நம்பிக்கையில் வருகிற அக்டோபர் மாதம் கொண்டாடப்பட உள்ள தீபாவளிக்கு தேவையான பட்டாசுகளை அரசு அறிவித்துள்ள சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு தயாரித்து வருகிறோம் என்பதே பொதுவான கருத்தாக உள்ளது.
-சாமிசன்