பெண்களிடம் தங்கசங்கிலி பறித்த டெல்லி கொள்ளையர்களின் படத்தை வெளியிட்ட போலீசார்
பெண்களிடம் தங்கசங்கிலி பறித்த டெல்லி கொள்ளையர்களின் புகைப்படங்களை வேப்பேரி போலீசார் நேற்று வெளியிட்டனர்.
சென்னை,
சென்னையில் தொடர்ந்து பெண்களிடம் தங்க சங்கிலி பறிப்பு சம்பவம் நடக்கிறது. டெல்லியை சேர்ந்த கொள்ளையர்கள் சென்னைக்கு விமானத்தில் பறந்து வந்து பெண்களிடம் சங்கிலி பறிப்பு சம்பவத்தை அரங்கேற்றி விட்டு தப்பி சென்று விடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதைத்தொடர்ந்து வேப்பேரி போலீசார் பெரியமேடு விடுதியில் தங்கியிருந்த டெல்லி கொள்ளையர்கள் இருவரை சமீபத்தில் கைது செய்தனர். அவர்கள் கொடுத்த தகவல் அடிப்படையில் அவர்களிடம் சேகரித்த 4 கொள்ளையர்களின் புகைப்படங்களை வேப்பேரி போலீசார் நேற்று வெளியிட்டனர்.
அந்த புகைப்படங்களுடன் நோட்டீஸ் அச்சடிக்கப்பட்டு, முக்கிய தெருக்களில் ஒட்டப்பட்டுள்ளது.
புகைப்படத்தில் உள்ள கொள்ளையர்கள் பற்றி தகவல் தெரிந்தவர்கள் வேப்பேரி குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சித்தார்த்த சங்கர்ராய்க்கு தகவல் அளிக்கலாம்.