தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பதை கண்டித்து காவிரி ஆற்றுக்குள் இறங்கி விவசாயிகள் போராட்டம்
தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பதை கண்டித்து நேற்று காவிரி ஆற்றுக்குள் இறங்கி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மண்டியா,
தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பதை கண்டித்து நேற்று காவிரி ஆற்றுக்குள் இறங்கி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகத்திற்கு தண்ணீர் திறப்புகுடகு, மைசூரு, மண்டியா மாவட்டங்களில் கடந்த சில வாரங்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இதன்காரணமாக காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து உள்ளது. மேலும், கே.ஆர்.எஸ். அணையின் நீர்மட்டமும் கணிசமாக உயர்ந்து வருகிறது. 124.80 அடி கொள்ளளவு கொண்ட கே.ஆர்.எஸ். அணையில் தற்போது 91.20 அடி தண்ணீர் இருப்பு உள்ளது. அணைக்கு வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து வினாடிக்கு 4 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.
காவிரியில் தமிழகத்திற்கு தொடர்ந்து தண்ணீர் சென்று கொண்டிருப்பதால், விவசாயிகளும், கன்னட அமைப்பினரும் மைசூரு, மண்டியாவில் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். ஆனாலும், தண்ணீர் திறப்பதை மட்டும் நிறுத்தவில்லை.
காவிரி ஆற்றுக்குள் இறங்கி...இந்த நிலையில், காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடுவதை கண்டித்தும், உடனடியாக தமிழகத்திற்கு செல்லும் தண்ணீரை நிறுத்த வலியுறுத்தியும் நேற்று மண்டியா மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் மற்றும் கன்னட அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோல, ஸ்ரீரங்கப்பட்டணா பகுதியிலும் காவிரி ஆறு முன்பு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சுமார் 50–க்கும் மேற்பட்ட விவசாயிகள் காவிரி ஆற்றுக்குள் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
அப்போது விவசாயிகள் கூறுகையில், மண்டியா மாவட்டத்தில் கடந்த 2012–ம் ஆண்டு முதல் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக 2012–ம் ஆண்டு முதல் இதுவரை 300–க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். இதனால் மாநில அரசு தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பதை நிறுத்திவிட்டு, கால்வாய்கள் மூலம் கர்நாடக விவசாயிகளுக்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்றனர்.
கால்வாய்களில் தண்ணீர் திறக்க வேண்டும்இதேபோல, மண்டியா, மைசூருவில் பல்வேறு பகுதிகளில் கர்நாடக விவசாயிகளின் நலனுக்காக காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பதை விட்டுவிட்டு மாநில அரசு கே.ஆர்.எஸ். அணையில் இருந்து கால்வாய்களில் தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று வலியுறுத்தினர்.