விவசாயியை கொலை செய்த 6 பேருக்கு ஆயுள் தண்டனை திருவண்ணாமலை கோர்ட்டு உத்தரவு
விவசாயியை கொலை செய்த 6 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து திருவண்ணாமலை கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை மாவட்டம், புதுப்பாளையம் காரப்பட்டு வேலாளர் வீதியை சேர்ந்தவர் காசி (வயது 55), விவசாயி. இவருக்கு அதே பகுதியில் விவசாய நிலம் உள்ளது. அதே பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன் (46). காசியின் விவசாய நிலத்திற்கு அருகில் வெங்கடேசனின் விவசாய நிலம் உள்ளது. அதனால் இவர்கள் இருவருக்கும் இடையே வரப்பு தொடர்பாக முன்விரோதம் இருந்தது.
கடந்த 2007-ம் ஆண்டு மார்ச் மாதம் 31-ந் தேதி காசி அவரது வீட்டின் வெளியே நின்று கொண்டிருந்தார். அப்போது அவருக்கும், வெங்கடேசனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த வெங்கடேசன் மற்றும் அவரது தரப்பினர் காசியை கட்டை மற்றும் இரும்பு கம்பியால் தாக்கினர்.
இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து புதுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, 2 பெண்கள் உள்பட 22 பேரை கைது செய்தனர்.
இதுகுறித்த வழக்கு திருவண்ணாமலை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த நிலையில் நேற்று இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மகிழேந்தி, காசியை கொலை செய்த குற்றத்திற்காக வெங்கடேசன், அவரது உறவினர்கள் பழனி (43), செல்வம் (50), ரங்கன் (65), மணிகண்டன் (39), ஏழுமலை (45) ஆகிய 6 பேருக்கு ஆயுள் தண்டனையும், தலா ரூ.1,500 அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். மற்ற 16 பேரை விடுதலை செய்து உத்தரவிட்டார்.
அதை தொடர்ந்து புதுப்பாளையம் போலீசார் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 6 பேரையும் வேலூர் மத்திய சிறைக்கு அழைத்து சென்று அடைத்தனர்.