விஜயமாநகரம் பகுதியில் நாளை மின் நிறுத்தம்
எம்.பரூரில் உள்ள துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருக்கிறது.
விருத்தாசலம்,
விருத்தாசலம் அருகே எம்.பரூரில் உள்ள துணை மின் நிலையத்தில் நாளை (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருக்கிறது. எனவே இங்கிருந்து மின்சாரம் வினியோகம் செய்யப்படும் பகுதிகளான எம்.பரூர், மு.பட்டி, கோணாங்குப்பம், தொட்டிகுப்பம், ரெட்டிகுப்பம், விஜயமாநகரம், எடசித்தூர், காட்டுப்பரூர், மு.புதூர், வலசை, பிஞ்சனூர் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரையில் மின்சாரம் வினியோகம் இருக்காது.
மேற்கண்ட தகவலை விருத்தாசலம் மின்வாரிய செயற்பொறியாளர் சரவணதுரைமோகன் தெரிவித்துள்ளார்.