என்ஜினீயர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து மாநகராட்சி ஊழியர்கள் திடீர் வேலை நிறுத்தம்
என்ஜினீயர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து மாநகராட்சி ஊழியர்கள் நேற்று திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
மும்பை,
என்ஜினீயர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து மாநகராட்சி ஊழியர்கள் நேற்று திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
வழிபாட்டு தலம் இடிப்புமும்பை எச் மேற்கு வார்டில் உள்ள அம்பேத்கர் சாலையில் சட்டவிரோதமாக கட்டப்பட்டிருந்ததாக கூறி கடந்த மாதம் 28–ந் தேதி மாநகராட்சி அதிகாரிகள் வழிபாட்டு தலம் ஒன்றை இடித்து தள்ளினார்கள்.
அந்த வழிபாட்டு தலத்தில் இருந்த சில பொருட்களையும் அவர்கள் கைப்பற்றி மாநகராட்சி அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர். இந்த நிலையில், அந்த பொருட்களை வாங்குவதற்காக அந்த வழிபாட்டு தலத்தின் அறங்காவலரும், சிவசேனா பிரமுகருமான சுனில் ஜாதவ் மற்றும் அவரது உதவியாளர் சசிகாந்த் லாடு ஆகிய இரண்டு பேர் மாநகராட்சி அலுவலகத்திற்கு சென்றனர்.
வேலை நிறுத்தம்அப்போது அங்கு பணியில் இருந்த என்ஜினீயர்கள் இரண்டு பேருடன், அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் என்ஜினீயர்கள் இருவரும் காயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், என்ஜினீயர்கள் மீதான தாக்குதலை கண்டித்தும், அவர்களை தாக்கிய இரண்டு பேரையும் கைது செய்ய வலியுறுத்தியும் நேற்று மாநகராட்சி ஊழியர்கள் திடீர் வேலை நிறுத்தம் செய்தனர். அவர்கள் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.