போலி பதிவு எண் விவகாரம்: லாரி உரிமையாளர் உள்பட 2 பேர் மீது வழக்கு

திருப்பூர்,
திருப்பூர் ஊரக போலீசார் கடந்த மாதம் 26-ந் தேதி ராக்கியாபாளையம் பிரிவு பகுதியில் வாகன சோதனை நடத்தினார்கள். அப்போது அந்த வழியாக வந்த மணல் லாரியை நிறுத்தி சோதனை நடத்தியபோது அந்த லாரியின் பதிவு எண் போலியானது என்பதும், இருசக்கர வாகன பதிவு எண்ணை லாரியில் பொருத்தி மணல் விற்பனை செய்யவந்ததும் கண்டறியப்பட்டது. அரசு மணல் குவாரியில் ஒரே நபர் அதிகமான லாரிகளுக்கு மணல் அள்ளும் வகையில் இவ்வாறு பதிவு எண்ணை போலியாக பொருத்தியது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அந்த லாரியை பறிமுதல் செய்த போலீசார் திருப்பூர் சப்-கலெக்டர் ஷ்ரவன்குமாரிடம் ஒப்படைத்தனர். இந்தநிலையில் போலியாக பதிவு எண்ணை பொருத்தி மோசடி செய்த லாரி உரிமையாளரான கரூர் மாவட்டம் குளித்தலையை சேர்ந்த தேன்மொழி, மன்னார்குடியை சேர்ந்த லாரி டிரைவர் மணிகண்டன்(27) ஆகியோர் மீது சப்-கலெக்டர் அளித்த புகாரின் பேரில் திருப்பூர் ஊரக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.