தண்ணீர் இல்லாததால் புனித நீராட வந்த பக்தர்கள் ஏமாற்றம்
தென்பெண்ணை ஆற்றில் தண்ணீர் இல்லாததால் அனுமன்தீர்த்தம், டி.அம்மாபேட்டை பகுதிகளில் புனித நீராட வந்த பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
ஊத்தங்கரை,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள அனுமன்தீர்த்தம் பகுதியில் தென்பெண்ணை ஆறு செல்கிறது. இந்த ஆற்றில் ஒவ்வொரு ஆண்டும் ஆடிப்பெருக்கு உள்ளிட்ட நாட்களில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடி அங்குள்ள ஆஞ்சநேயர் சாமிக்கு சிறப்பு பூஜை செய்து வழிபட்டு செல்வார்கள். பருவமழை பொய்த்து போனதால் இந்தாண்டு தென்பெண்ணை ஆற்றில் ஆங்காங்கே குட்டை போல் தண்ணீர் தேங்கி நின்றது.
இந்த நிலையில் நேற்று ஆடிப்பெருக்கு விழா என்பதால் பக்தர்கள் தென்பெண்ணை ஆற்றிற்கு புனித நீராட சென்றனர். குட்டையில் தேங்கிய தண்ணீரை மோட்டார் மூலம் உறிஞ்சி எடுத்து பக்தர்கள் குளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. பின்னர் பக்தர்கள் அங்குள்ள ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்று சாமிக்கு சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர். தென்பெண்ணை ஆற்றில் தண்ணீர் இல்லாததால் பக்தர்கள், புதுமண தம்பதிகள் வருகை குறைவாக இருந்தது. இவர்கள் ஆற்றில் இறங்கி குளிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே டி.அம்மாபேட்டை தென்பெண்ணை ஆற்றங்கரையோரம் சென்னம்மாள் கோவில் உள்ளது. நேற்று ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் இங்கு புனித நீராட வந்தனர். ஆனால் போதிய தண்ணீர் வராததால் அவர்கள் ஏமாற்றம் அடைந்தனர். மேலும் ஆங்காங்கே குட்டை போல் தேங்கி நின்ற தண்ணீரில் குளித்து புனித நீராடினர்.
இதைத் தொடர்ந்து சென்னம்மாள் கோவிலில் சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர். பின்னர் ஆற்றங்கரையில் உள்ள பாறைகளுக்கு மஞ்சள், குங்குமம் வைத்து வணங்கினர். மேலும் ஆடு, கோழிகளை பலியிட்டனர். பின்னர் அவற்றை சமைத்து அங்கேயே அமர்ந்து தங்களுடைய குடும்பத்தினருடன் பக்தர்கள் சாப்பிட்டனர். மேலும் குடிநீரை ரூ. 10 கொடுத்தும், சமையல் செய்வதற்கான நீரை ரூ.30 கொடுத்தும் வாங்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டது.