விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒன்றிய செயற்குழு கூட்டம்

விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒன்றிய செயற்குழு கூட்டம்

Update: 2017-08-03 22:30 GMT
வேப்பந்தட்டை,

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையில் ஒன்றிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் (மேற்கு) வெற்றியழகன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் (கிழக்கு) இடிமுழக்கம் வரவேற்றார். மாவட்ட செயலாளர் தமிழ் மாணிக்கம், மாநில பொறுப்பாளர்கள் செங்கோலன், பெரியசாமி, சீனிவாசராவ், ராசித் அலி ஆகியோர் பேசினர். கூட்டத்தில் கட்சி தலைவர் திருமாவளவனின் பிறந்த நாளை அனைத்து ஊர்களிலும், கொடி ஏற்றி இனிப்பு வழங்கி, ஏழை எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடுவது. தமிழக அரசு அறிவித்தபடி அனைத்து விவசாயிகளுக்கும் காப்பீடு வழங்க வேண்டும். வேப்பந்தட்டை ஒன்றியத்தில் ஏரி, குளம், ஓடை, குட்டைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். வேப்பந்தட்டையில் போலீஸ் நிலையம் அமைக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் வேப்பந்தட்டை கிளை செயலாளர் இளையபெருமாள் நன்றி கூறினார். 

மேலும் செய்திகள்