எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா கலை இலக்கிய போட்டிகள் கலெக்டர் தொடங்கி வைத்தார்
காஞ்சீபுரம் மாவட்டத்தில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா கலை இலக்கிய போட்டிகளுக்கான தொடக்க விழா வாலாஜாபாத்தில் நடந்தது.
வாலாஜாபாத்,
காஞ்சீபுரம் மாவட்டத்தில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா வரும் 30–ந்தேதி கொண்டாடப்பட உள்ளது. விழாவையொட்டி பள்ளி கல்வி துறை சார்பில் ஒன்றிய அளவிலான கலை இலக்கிய போட்டிகளுக்கான தொடக்க விழா வாலாஜாபாத்தில் நடந்தது. போட்டிகளை காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா தொடங்கி வைத்தார். பள்ளி மாணவ–மாணவிகளுக்கிடையிலான பேச்சு போட்டி, கட்டுரை போட்டி, கவிதை போட்டி, ஓவிய போட்டி உள்ளிட்டவை நடைபெறுகிறது. தொடக்க விழாவில் முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம், முன்னாள் எம்.எல்.ஏ. வாலாஜாபாத் பா.கணேசன், முன்னாள் உள்ளாட்சி பிரதிநிதிகள் தென்னேரி என்.எம். வரதராஜுலு, ரமேஷ் முதன்மை கல்வி அதிகாரி திருவளர்ச்செல்வி மற்றும் மாணவ–மாணவிகள் கலந்து கொண்டனர்.