அடிப்படை வசதிகள் கேட்டு எடப்பாடி நகராட்சி அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்த பொதுமக்கள்

எடப்பாடி நகராட்சிக்கு உட்பட்ட கவுண்டம்பட்டி 25–வது வார்டு பேனாரப்பன் கோவில் செல்லும் வழியில் 100–க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு சாக்கடை கால்வாய், சுகாதார வளாகம், சாலை வசதி உள்பட அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை என கூறப்படுகிறது.

Update: 2017-08-02 23:00 GMT

எடப்பாடி,

எடப்பாடி நகராட்சிக்கு உட்பட்ட கவுண்டம்பட்டி 25–வது வார்டு பேனாரப்பன் கோவில் செல்லும் வழியில் 100–க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு சாக்கடை கால்வாய், சுகாதார வளாகம், சாலை வசதி உள்பட அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை என கூறப்படுகிறது. இதனால் தெருக்களில் கழிவுநீர் செல்வதால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாகவும், அதன் காரணமாக குழந்தைகள் உள்பட அனைவருக்கும் காய்ச்சல் மற்றும் தொற்று நோய் ஏற்படுவதாகவும் அப்பகுதி பொதுமக்கள் புகார் தெரிவித்து வந்தனர். இதுபற்றி நகராட்சி அலுவலகத்தில் அவர்கள் பலமுறை மனு கொடுத்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.

இந்தநிலையில், அடிப்படை வசதிகள் கேட்டு கவுண்டம்பட்டி பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் நேற்று எடப்பாடி நகராட்சி அலுவலகத்திற்கு திரண்டு வந்து அங்கிருந்த அதிகாரிகளை சந்தித்து மனு கொடுத்தனர்.

மேலும் செய்திகள்