சேலத்தில் கல்லூரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
அரசு உதவி பெறும் கல்லூரி ஆசிரியர் சங்கம் சார்பில் சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஈரோடு மண்டல தலைவர் விஜயதுரை தலைமை தாங்கினார். மாநில தலைவர் முருகன், பொதுச்செயலாளர் சகாய சதீஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சேலம்,

7–வது ஊதியக்குழு பரிந்துரைகளை உடனடியாக அமல்படுத்த வேண்டும், கல்லூரி ஆசிரியர்களும் துணைவேந்தராக நியமனம் பெறும் வகையில் அவசர சட்டத்தை திருத்த வேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மேலும் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் ஈரோடு மண்டல செயலாளர் வெங்கடாசலம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.