குடிநீர் தட்டுப்பாட்டை போக்க வேண்டும் வட்டார வளர்ச்சி அலுவலரிடம், கிராமமக்கள் கோரிக்கை

பரங்கிநல்லூர் கிராமத்தில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வட்டார வளர்ச்சி அலுவலரிடம், கிராமமக்கள் கோரிக்கை மனு அளித்தனர்.

Update: 2017-08-02 22:30 GMT
நாகப்பட்டினம்,

நாகை மாவட்டம் பரங்கிநல்லூர் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள், நாகை வட்டார வளர்ச்சி அலுவலர் மலர்விழியிடம் நேற்று ஒரு கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:-

பரங்கிநல்லூர் கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறோம். இந்த பகுதியில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. குடிநீர் பிரச்சினை குறித்து பலமுறை மாவட்ட கலெக்டர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோரிடம் மனுக்கள் கொடுத்துள்ளோம். ஆனால் இதுவரை குடிநீர் தட்டுப்பாட்டை போக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

மின்மோட்டார்

இதனால் குடிக்க தண்ணீர் இன்றி குழந்தைகள், வயதானவர்களை வைத்துக்கொண்டு மிகவும் சிரமப்பட்டு வருகிறோம். எனவே பரங்கிநல்லூர் பகுதியில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்கும் வகையில் அந்த பகுதியில் மின்மோட்டார் அமைத்து தண்ணீர் வினியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்