குடிநீர் தட்டுப்பாட்டை போக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் நடந்தது
திருமருகல் ஒன்றியத்தில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க வலியுறுத்தி விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திட்டச்சேரி,
திட்டச்சேரி பேரூராட்சி அலுவலகம் முன்பு திருமருகல் ஒன்றியத்தில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க வலியுறுத்தி அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட பொருளாளர் சித்தார்த்தன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன், ஒன்றிய தலைவர் சிங்காரவேலு ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் திருமருகல் ஒன்றியத்தில் வறட்சியின் காரணமாக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. எனவே திருமருகல் ஒன்றியத்தில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். வறட்சியின் காரணமாக விவசாய தொழிலாளர்கள் வேலையின்றி இருப்பதால் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் வழங்கப்படும் 100 நாள் வேலையை 200 நாட்களாக உயர்த்தி வழங்க வேண்டும்.
100 நாள் வேலை தொழிலாளர்களுக்கு ரூ.400 கூலி வழங்க வேண்டும். கடும் வறட்சியால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு கூடுதலாக 50 நாட்கள் வேலை வழங்க வேண்டும். விவசாய தொழிலாளர்களுக்கு வறட்சி நிவாரணமாக ரூ.15 ஆயிரம் வழங்க வேண்டும். கோவில் மனைகளில் குடியிருக்கும் அனைவருக்கும் குடிமனை பட்டா உடனே வழங்க வேண்டும். ஜனநாயக முறையில் போராடியவர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை வாபஸ் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய குழு உறுப்பினர் தியாகராஜன், திருமருகல் கிளை செயலாளர் ராஜாஇரணியன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் ஜெயபால், விவசாய சங்க ஒன்றிய செயலாளர் பொன்மணி, தமிழ்நாடு போக்குவரத்து கழகத்தை சேர்ந்த ராஜேந்திரன், விவசாய சங்க ஒன்றிய தலைவர் ஸ்டாலின்பாபு உள்பட பலர் கலந்து கொண்டனர்.