துணைவேந்தர் நியமனத்தை எதிர்த்த வழக்கில் தன்னையும் சேர்க்கக்கோரி நெல்லை பேராசிரியர் ஐகோர்ட்டில் மனு தாக்கல்
மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தராக செல்லத்துரை நியமிக்கப்பட்டதை எதிர்த்து மதுரை ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ளது.
மதுரை,
மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தராக செல்லத்துரை நியமிக்கப்பட்டதை எதிர்த்து மதுரை ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ளது. இந்தநிலையில் அந்த வழக்கில் தன்னையும் சேர்க்கக்கோரி நெல்லையை சேர்ந்த மரியஜான் என்பவர் துணை மனு தாக்கல் செய்துள்ளார்.
அதில், ‘நான் நெல்லை மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றுவிட்டேன். மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பித்து இருந்தேன். முடிவில் நான், செல்லத்துரை உள்பட 3 பேரின் பெயர் தான் துணைவேந்தர் பதவிக்கு பரிந்துரை செய்யப்பட்டது. அந்த பதவிக்கான முழு தகுதி எனக்கு உள்ளது. ஆனால் நான் துணைவேந்தராக நியமிக்கப்படவில்லை. எனவே என்னையும் இந்த வழக்கில் சேர்க்க வேண்டும்‘ என்று கூறியுள்ளார்.