முக்காணி சுற்றுவட்டார பகுதி மக்கள் புகார் எதிரொலியாக ஏரல் தரைமட்ட பாலத்தில் மணல் அடைப்பு அகற்றம்
முக்காணி சுற்றுவட்டார பகுதி மக்கள் புகார் எதிரொலியாக ஏரல் தரைமட்ட பாலத்தில் உள்ள மணல் அடைப்பு நேற்று பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றப்பட்டது.
ஏரல்,

பாலம் சீரமைப்பு
மழைக்காலங்களில் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது, ஏரல் தரைமட்ட தாம்போதி பாலம் மூழ்கி விடும். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில், ஏரல் தரைமட்ட பாலத்தின் ஒரு பகுதி அடித்து செல்லப்பட்டது. பின்னர் அதனை சீரமைத்தாலும், அதன் அடியில் கசிவு நீர் வெளியேறியது.
கடந்த ஆண்டு பருவமழை பொய்த்ததால் தாமிரபரணி ஆறு தண்ணீரின்றி வறண்டது. ஏரல் தரைமட்ட பாலத்தின் மேற்கு பகுதியிலும் தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் வெகுவாக குறைந்து விட்டது. இந்த நிலையில் தரைமட்ட பாலத்தை பலப்படுத்தும் வகையில், அதன் மேற்கு பகுதியில் ஊர் மக்கள் மணலை கொட்டி சீரமைத்தனர்.
கிராம மக்கள் புகார்
இதனால், ஏரலை அடுத்த வாழவல்லான் நீரேற்று நிலையத்துக்கு தண்ணீர் வராததால், முக்காணி சுற்றுவட்டாரத்திலுள்ள ஏராளமான கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட அப்பகுதி மக்கள் பாலத்திலுள்ள அடைப்பை அகற்றக்கோரி, மாவட்ட நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தனர். இந்த நிலையில் ஏரல் தரைமட்ட தாம்போதி பாலத்தை தூத்துக்குடி உதவி கலெக்டர் தீபக் ஜேக்கப் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது, மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கந்தசாமி, ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் தாமஸ் பயஸ் அருள், வருவாய் ஆய்வாளர் சாமிநாதன், ஏரல் போலீஸ் இன்ஸ்பெக்டர் கிங்ஸ்லி தேவ ஆனந்த், குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக அதிகாரி ஜெயசீலன், உதவி நிர்வாக அதிகாரி நல்லதம்பி மற்றும் பலர் உடன் இருந்தனர்.
மணல் அடைப்பு அகற்றம்
பின்னர் தரைமட்ட பாலம் அருகில் இருந்த மணல் அடைப்பை பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றினர். ஆனாலும் ஆற்றில் குறைந்த அளவே தண்ணீரே இருந்ததாலும், அதிலும் பெருமளவு அமலை செடிகள் நிறைந்து இருந்ததாலும், பாலத்தை கடந்து தண்ணீர் செல்லவில்லை.