பெட்ரோல் பங்க் ஊழியர்கள் 2 பேரை வெட்டி சாய்த்த கும்பல்

ராஜபாளையம் பழைய பஸ்நிலையம் முன்பு உள்ள பெட்ரோல் பங்கில் நேற்று முன்தினம் இரவு 2 பேர் பெட்ரோல் போடாமல் ரசீது கேட்டுள்ளனர்.

Update: 2017-08-02 21:45 GMT

ராஜபாளையம்,

ராஜபாளையம் பழைய பஸ்நிலையம் முன்பு உள்ள பெட்ரோல் பங்கில் நேற்று முன்தினம் இரவு 2 பேர் பெட்ரோல் போடாமல் ரசீது கேட்டுள்ளனர். தர மறுத்ததால் தகராறு ஏற்பட்ட நிலையில் பெட்ரோல் பங்கில் வேலை செய்யும் ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த கருப்பையா (வயது 19), நவீன்குமார் (19) ஆகிய இருவரும் சேர்ந்து அவர்களை தாக்கியதாக தெரிகிறது. இந்தநிலையில் நேற்று பிற்பகல் 2 மணி அளவில் 6 பேர் கொண்ட கும்பல் அரிவாளுடன் அங்கு வந்து கருப்பையா மற்றும் நவீன்குமாரை வெட்டினார்க ள். தப்பிஓடிய போது அந்த கும்பல் சுற்றிவளைத்து சரமாரியாக வெட்டி சாய்த்து விட்டு ஓடி விட்டனர். இதில் பலத்த காயமடைந்த கருப்பையா, நவீன்குமார் ஆகியோர் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். இது குறித்து இன்ஸ்பெக்டர்கள் ஜேசு, பவுல்ஏசுதாஸ் மற்றும் போலீசார் விசாரித்து வருகிறார்கள். 6 பேர் கொண்ட கும்பலை வலைவீசி தேடி வருகின்றனர். பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்