மணல் ஏற்றி வந்த லாரி பறிமுதல்; டிரைவர் கைது

மணல் ஏற்றி வந்த லாரி பறிமுதல்; டிரைவர் கைது

Update: 2017-08-02 22:15 GMT
திருமானூர்,

திருமானூர் அடுத்துள்ள வெங்கனூர் பகுதியில் நேற்று வெங்கனூர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக மணல் ஏற்றி கொண்டு லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. இதைபார்த்த போலீசார் அந்த லாரியை மறித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், இலந்தை கூடத்தை சேர்ந்த டிரைவர் தர்மராஜ் (வயது 29) என்பவர் கொள்ளிடம் ஆற்றிலிருந்து அனுமதியின்றி மணல் ஏற்றி வந்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் தர்மராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் லாரியையும் போலீசார் பறிமுதல் செய்தனர். 

மேலும் செய்திகள்