கடையில் குளிர்பானம் குடித்து விட்டு பணம் தராமல் தகராறு செய்த வாலிபர் கைது

கல்பாக்கத்தை அடுத்த சதுரங்கப்பட்டினத்தில் கடையில் குளிர்பானம் குடித்து விட்டு பணம் தராமல் தகராறு செய்த வாலிபர் கைது.

Update: 2017-08-01 22:00 GMT
கல்பாக்கம், 

கல்பாக்கத்தை அடுத்த சதுரங்கப்பட்டினத்தில் பெட்டிக்கடை நடத்தி வருபவர் விஜயகுமார். இவர் கடைக்கு காஞ்சீபுரத்தை சேர்ந்த ராஜா (வயது 31) தன் நண்பர்களுடன் வந்து குளிர்பானம் வாங்கி குடித்துள்ளார்.

பின்னர் பணத்தை தராமல் ராஜா அங்கிருந்து புறப்பட்டார். இது குறித்து கேட்ட போது, கடையில் இருந்த பொருட்களை ராஜா கீழே தள்ளி சேதப்படுத்தியதாக சதுரங்கப்பட்டினம் போலீசில் விஜயகுமார் புகார் செய்தார்.

அதன் பேரில் இன்ஸ்பெக்டர் அய்யனாரப்பன் வழக்குப் பதிவு செய்து ராஜாவை கைது செய்து புழல் சிறையில் அடைத்தார். 

மேலும் செய்திகள்