நீர்மட்டம் மேலும் ஒரு அடி உயர்வு: மேட்டூர் அணை மின்நிலையத்தில் உற்பத்தி தொடங்கியது
மேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் ஒரு அடி உயர்ந்தது. மேலும், அணை மின்நிலையத்தில் மின் உற்பத்தி நேற்று தொடங்கியது.
மேட்டூர்,
கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர், மேட்டூர் அணையை வந்தடைந்ததன் காரணமாக நீர்மட்டம் உயர்ந்து கொண்டே வருகிறது.
தென்மேற்கு பருவமழை காலமான இந்த நேரத்தில் அணை நீர்மட்டம் 90 அடியை தாண்டி அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை தமிழகத்தில் தீவிரம் அடையவில்லை. இதனால் கர்நாடக மாநிலத்தில் பெய்து வரும் மழை அளவை பொறுத்தே அணையில் இருந்து காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.
கடந்த சில நாட்களாக மேட்டூர் அணைக்கு 7 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. இந்த நிலையில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் அணைக்கு நீர்வரத்து 7 ஆயிரம் கனஅடிக்கு மேல் அதிகரித்து உள்ளது.
நேற்று முன்தினம் காலை 8 மணிக்கு அணைக்கு வினாடிக்கு 7,271 கனஅடி வீதம் தண்ணீர் வந்தது. நேற்று காலை 8 மணிக்கு நீர்வரத்து சற்று குறைந்து வினாடிக்கு 7,181 கனஅடி நீர் வந்தது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக 500 கனஅடி வீதம் திறந்து விடப்பட்ட தண்ணீர் நேற்று முன்தினம் இரவு முதல் 2,500 கனஅடியாக அதிகரிக்கப்பட்டது.
இவ்வாறு திறந்து விடப் படும் தண்ணீர் அணையையொட்டி அமைந்துள்ள அணை மின்நிலையம் வழியாக வெளியேற்றப்படுகிறது. இதனால் 11 மெகாவாட் மின்உற்பத்தி நேற்று தொடங்கி நடந்து வருகிறது.
மேலும் காவிரி ஆற்றின் குறுக்கே உள்ள கதவணை மின்நிலையங்கள் மூலம் தலா 30 மெகாவாட் மின்உற்பத்தி நடைபெறுகிறது.
தண்ணீர் திறப்பைவிட அணைக்கு நீர்வரத்து அதிகமாக இருப்பதால் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகிறது. நேற்று முன்தினம் காலை 8 மணிக்கு 34.60 அடியாக இருந்த நீர்மட்டம் நேற்று காலை 8 மணிக்கு மேலும் ஒரு அடி உயர்ந்தது. அதாவது 35.57 அடியாக உயர்ந்துள்ளது. தண்ணீர் வரத்து மேலும் அதிகரிக்கு மானால் அணை நீர்மட்டம் வேகமாக உயர வாய்ப்பு உள்ளது.
மேட்டூர் அணை நீர்மட்டம் 35 அடிக்கு மேல் அதிகரித்து உள்ளதால் அணையின் 16 கண் பாலம் அருகே அமைக்கப்பட்டு உள்ள சேலம் மாநகராட்சி நீரேற்று நிலையத்துக்கு மிதவை மோட்டார்கள் மூலம் அணையில் இருந்து தண்ணீர் எடுக்கப்பட்ட நிலை மாறி தற்போது நேரடியாக அணையில் இருந்து தண்ணீர் உறிஞ்சி எடுக்கப்படுகிறது.