பெண்ணின் வாயில் விஷம் ஊற்றி கொல்ல முயற்சி வாலிபர் கைது
திருவள்ளூர் அருகே பெண்ணின் வாயில் விஷம் ஊற்றி கொல்ல முயன்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.
திருவள்ளூர்,
திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் கீழ்நல்லாத்தூர் சங்கராச்சாரியார் நகரை சேர்ந்தவர் மோகன்ராஜ். இவரது மனைவி லலிதா (வயது 34). கடந்த 27–ந்தேதியன்று இரவு லலிதா தன்னுடைய வீட்டில் தூங்கி கொண்டிருந்தார்.
அப்போது வீட்டுக்கு வந்த வெள்ளேரிதாங்கல் கிராமத்தை சேர்ந்த கார்த்திக் (23) என்பவர் ஏற்கனவே தங்களுக்குள் இருந்த பகையை மனதில் வைத்துக்கொண்டு அவரை தகாத வார்த்தையால் பேசி அங்கிருந்த துணியால் அவரது கழுத்தை நெரித்து அவரது வாயில் விஷத்தை ஊற்றிவிட்டு தப்பிச்சென்று விட்டார்.
கைது
இதில் உயிருக்கு போராடிய லலிதாவை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து லலிதா மணவாளநகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து தூங்கி கொண்டிருந்த பெண்ணின் வாயில் விஷம் ஊற்றி கொல்ல முயன்ற கார்த்திக்கை நேற்று முன்தினம் கைது செய்து அவரிடம் விசாரித்து வருகின்றனர்.