கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தில் குடிநீர் வழங்கக்கோரி சாலை மறியல்

கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தில் குடிநீர் வழங்கக்கோரி சாலை மறியல் போராட்டம் நடந்தது.

Update: 2017-08-01 22:00 GMT
கும்மிடிப்பூண்டி,

கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தை சேர்ந்த தேர்வழி ஊராட்சிக்கு உட்பட்டது கம்மார்பாளையம் கிராமம். இங்கு கடந்த சில மாதங்களாக குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இந்த நிலையில் இந்த         பகுதியை   சேர்ந்த        50 பேர் தங்களது கிராமத்திற்கு முறையாக குடிநீர் வழங்கக்கோரி நேற்று திடீர்  சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 இது குறித்து தகவல் அறிந்த கும்மிடிப்பூண்டி கிராம ஊராட்சிகளுக்கான வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேந்திரபாபு  சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். 

போக்குவரத்து பாதிப்பு

அப்போது குடிநீர் தட்டுப்பாட்டை போக்க முறையான ஆய்வு நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் உறுதி அளித்தார்.  இதையடுத்து பொதுமக்கள் தங்களது சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

 இந்த சாலை மறியலால் அந்த பகுதியில் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்